உள்ளடக்கத்துக்குச் செல்

கலாசின் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாசின் மாகாணம்
Kalasin Province
กาฬสินธุ์
இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக: தட் யாகு அடுக்குத்தூபி, லாம் பாவ் அணை, சிரிந்தோருன் அருங்காட்சியகம், புத்தனிமிட் ஆலயம்

கொடி

சின்னம்
குறிக்கோளுரை:
புகழ்பெற்ற லுவாங் போ ஓங் அணை. முவாங் பா டேட் சோங் யாங், சிறப்புமிக்க பாங்லாங். பூ தாய் கலாச்சாரம். பிரேவா பட்டு, பூ பானின் சவோய் செங்குத்துப் பாறை. மாபெரும் லாம் பாவோ நீர்த்தேக்கம். டைனோசர்கள், மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினங்கள்.
หลวงพ่อองค์ดำลือเลือง เมืองฟ้าแดดสงยาง โปงลางเลิศล้ำ วัฒนธรรมภูไท ผ้าไหมแพรวา ผาเสวยภูพาน มหาธารลำปาว ไดโนเสาร์สัตว์โลกล้านปี
      கலாசின் மாகாணம்       தாய்லாந்து
      கலாசின் மாகாணம்       தாய்லாந்து
ஆள்கூறுகள்: 16°25′57″N 103°30′25″E / 16.43250°N 103.50694°E / 16.43250; 103.50694
நாடு தாய்லாந்து
மாகாணம்கலாசின் மாகாணம்
நிலப்பகுதிவடக்கு கிழக்கு தாய்லாந்து
தலைநகரம்கலாசின் நகரம்
பரப்பளவு
 • மொத்தம்6,936 km2 (2,678 sq mi)
 • பரப்பளவு தரவரிசை27-ஆவது
ஏற்றம்
50 m (160 ft)
மக்கள்தொகை
 (2024)[2]
 • மொத்தம்▼9,62,444
 • தரவரிசை22-ஆவது
 • அடர்த்தி139/km2 (360/sq mi)
  அடர்த்தி தரவரிசை30-ஆவது
மனிதச் சாதனை குறியீடு[3]
 • HAI (2022)0.6315 
51-ஆவது
மொத்த உள்நாட்டு உற்பத்தி[5]
 • மொத்தம்฿56 பில்லியன்
(US$1.9 பில்லியன்) (2019)
நேர வலயம்தாய்லாந்து நேரம் +7
அஞ்சல் குறியீடு
46xxx
தொலைபேசி043
ஐஎசுஓ 3166 குறியீடுTH-46
வாகனப் பதிவுกาฬสินธุ์
இணையதளம்kalasin.go.th
kalasin-pao.go.th
கலாசினில் பக்கவாட்டு வண்டியுடன் ஓர் உணவு விற்பனையாளர்

கலாசின் மாகாணம் (ஆங்கிலம்: Kalasin Province; தாய்: กาฬสินธุ์) என்பது தாய்லாந்தின் 76 மாகாணங்களில் (சாங்வாட் Changwat) ஒன்றாகும். இந்த மாகாணம், ஈசான் என்றும் அழைக்கப்படும் தாய்லாந்தின் மேல் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. கலாசின் மாகாணத்தை உருவாக்குவதற்கான பிஇ 2490 (1947) (Act Establishing Changwat Kalasin, BE 2490 (1947) சட்டத்தின் வழியாக கலாசின் மாகாணம் நிறுவப்பட்டு, 1947 அக்டோபர் 1 அன்று முறைப்படி நடைமுறைக்கு வந்தது.

இந்த மாகாணத்தில் கோராட் பீடபூமியின் (Khorat Plateau) மிகப்பெரிய அகழியால் சூழப்பட்ட வரலாற்றுத் தளமான முயெங் பா டேட் சோங் யாங்; மற்றும் பு கும் காவோவில் உள்ள டைனோசர் படிவப் படுக்கைகளும் அமைந்துள்ளன.

முயெங்

[தொகு]

முயெங் ((Mueang) என்பது ஒரு பாரம்பரிய தாய் மொழிச் சொல்லாகும். இது வரலாற்று அடிப்படையில் ஓர் உள்ளூர் ஆட்சியாளரால் ஆளப்பட்டு, சுற்றிலும் வேளாண் கிராமங்களைக் கொண்ட ஒரு நகர-அரசை (City-State) அல்லது நகரத்தைக் குறிக்கிறது. நவீன தாய்லாந்தில், ஒரு மாகாணத்தின் தலைநகர மாவட்டத்தைக் குறிக்க ஆம்போ முயெங் (Amphoe Mueang) என்ற சொல் தொடர் பயன்படுகிறது.[6] மேலும் இது பேச்சுவழக்கில் ஒரு நகரம் அல்லது நாட்டைக் குறிக்கவும் பயன்படுகிறது. (எடுத்துக்காட்டு: முயெங் தாய் என்றால் தாய்லாந்து நாடு என்று பொருள்).

கலாசின் மாகாணத்தின் அண்டை மாகாணங்கள்:

புவியியல்

[தொகு]

கலாசின் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் குன்றுகள் நிறைந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. கலாசின் நகரம் 152 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[7] இதன் வடக்குப் பகுதியில் 1963 முதல் 1968 வரை கட்டப்பட்ட லாம் பாவ் அணை (Lam Pao Dam) உள்ளது. இது வெள்ளத் தடுப்பு மற்றும் வேளாண்மைக்காக 1,430 மில்லியன் கன மீட்டர் தண்ணீரைச் சேமித்து வைக்கிறது. இந்த லாம் பாவ் நீர்த்தேக்கம் இம்மாகாணத்தின் வடக்குப் பகுதியை இரண்டு பாதிகளாகப் பிரிக்கிறது.

தேசுதா பாலம் (Thesuda Bridge) என்பது 2006-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 2.4 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு வலுவூட்டப்பட்ட பைஞ்சுதை பாலமாகும். இது கிழக்கே உள்ள சகத்சகான் மாவட்டத்தையும் மேற்கே உள்ள நாங் குங் சி மாவட்டத்தையும் இணைக்கிறது. இதன் மூலம் இதற்கு முந்தைய சாலைப் பயண நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை மிச்சமாகிறது.[8]

இந்த நீர்த்தேக்கத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சாலைப் பாலம், மேற்கில் உள்ள பான் டாங் பாங் கிராமத்தையும் கிழக்கில் உள்ள அம்போ வாங் சாம் மோ மாவட்டத் தலைநகரத்தையும் இணைக்கிறது.

டைனோசர் புதை படிவங்கள்

[தொகு]

தாய்லாந்தின் மிகப்பெரிய டைனோசர் தளமான பு கும் காவோ தளத்தில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் புதை படிவங்களுக்கு, கலாசின் மாகாணம் மிகவும் பெயர் பெற்றது.

இங்கு கிடைத்துள்ள புதை படிவங்களில் பெரும்பாலானவை 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய சாரோபாட் (Sauropod) வகையைச் சேர்ந்த டைனோசர்களின் புதைபடிவங்கள் ஆகும்.

பு பான் மலைத்தொடர் (Phu Phan mountains) சக்கோன் நக்கோன் மாகாணத்துடன் எல்லையை வரையறுக்கிறது. இப்பகுதியின் ஒரு பகுதி ஒரு தேசிய பூங்காவாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மாகாணத்தின் மொத்த காடுகளின் பரப்பளவு 759 சதுர கி.மீ.; இது மாகாணத்தின் மொத்த பரப்பளவில் 10.9 விழுக்காடு ஆகும்.[1]

தேசியப் பூங்காக்கள்

[தொகு]

கலாசின் மாகாணத்தில் 2 தேசிய பூங்காக்கள் உள்ளன. இந்த இரண்டு தேசிய பூங்காக்களும், வேறு ஐந்து தேசிய பூங்காக்களுடன் இணைந்து, தாய்லாந்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பிராந்தியம் 10 (உடோன் தானி) என்பதை உருவாக்குகின்றன.

  • பு பான் தேசியப் பூங்கா (Phu Phan National Park) – 665 சதுர கி.மீ. (257 சதுர மைல்)
  • பு பா லெக் தேசியப் பூங்கா (Phu Pha Lek National Park) – 404 சதுர கி.மீ. (156 சதுர மைல்)

பொருளாதாரம்

[தொகு]

கலாசின் ஒரு வேளாண் மாகாணமாகும். இது ஒட்டும் அரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு, கரும்பு போன்ற பிற பயிர்களையும் உற்பத்தி செய்கிறது. மேலும், இங்குள்ள கிராமப்புறக் குடும்பங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயிரிடுவதுடன்; கூடைகள் மற்றும் பட்டுப் பொருட்களையும் தயாரிக்கிறார்கள்.

மாகாண நிருவாகம்

[தொகு]
கலாசின் மாகாணத்தின் 18 மாவட்டங்கள்

கலாசின் மாகாணம் 18 மாவட்டங்களாக (ஆம்போ) பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் மேலும் 134 துணை மாவட்டங்கள் (தம்போன்) 1,509 கிராமங்கள் (மூபான்) என பிரிக்கப்பட்டுள்ளது.

  1. முயெங் கலாசின்
  2. நா மோன்
  3. கமலாசாய்
  4. ரோங் காம்
  5. குச்சினாராய்
  6. காவோ வாங்
  7. யங் தலாத்
  8. உவாய் மெக்
  9. சகத்சகான்
  1. காம் முயெங்
  2. தா காந்தோ
  3. நோங் குங் சி
  4. சோம்டெட்
  5. உவாய் புயெங்
  6. சாம் சாய்
  7. நா கூ
  8. டான் சான்
  9. கோங் சாய்

மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2022

[தொகு]
உடல்நலம் கல்வி வேலைவாய்ப்பு வருமானம்
58 47 46 71
வீட்டுவசதி குடும்பம் போக்குவரத்து பங்கேற்பு
6 22 63 34
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2022) குறியீட்டில் 0.6315 என்ற மதிப்புடன் "தாழ்ந்த" நிலையில் உள்ள கலாசின் மாகாணம், தாய்லாந்து நாட்டின் தரவரிசையில் 51-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு முதல், தாய்லாந்திலுள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மனித மேம்பாட்டின் எட்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு குறியீடான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணை (Human achievement index - HAI) பயன்படுத்தி, தேசிய அளவில் மனித மேம்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் தேசிய பொருளாதார சமூக மேம்பாட்டு வாரியம் (National Economic and Social Development Board) இப்பணியை ஏற்றுக் கொண்டுள்ளது.[3]

நிலைவகைப்பாடு
  1 - 13உயர்வு
14 - 29சற்று உயர்வு
30 - 45சராசரி
46 - 61சற்று குறைவு
62 - 77குறைவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. Retrieved 6 April 2021.
  2. ↑ "Official statistics registration systems". Department of Provincial Administration (DOPA). Retrieved 10 February 2025. , year 2024, provincial level, Excel File, no.46
  3. 1 2 "ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 12 March 2024. , page 25{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. ↑ "ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 12 March 2024. , page 17{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. ↑ "Gross Regional and Provincial Product, 2019 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). July 2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/ewt_dl_link.php?nid=5628&filename=gross_regional. பார்த்த நாள்: 22 January 2020.
  6. ↑ Thai-English Transcription of Changwat, Amphoe, King Amphoe and Tambon. Bangkok: Kō̜ng Wichākān læ Phǣnngān, Krom Kānpokkhrō̜ng. 2007. ISBN 978-974-7857-04-7. Archived from the original on 2007-09-26. Retrieved 2007-05-28.
  7. ↑ "Elevation of Kalasin, Thailand Elevation Map, Topo, Contour". FloodMap. Retrieved 26 December 2017.
  8. ↑ Lepetit, Patrick (2015). "Thesuda Bridge". patricklepetit.jalbum. P-Lepetit.com. Retrieved 19 March 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]

விக்கிமூலத்தில் Kalasin கலாசின் பற்றிய ஆக்கங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாசின்_மாகாணம்&oldid=4699339" இலிருந்து மீள்விக்கப்பட்டது