உள்ளடக்கத்துக்குச் செல்

கலாசாலா பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாசாலா பாபு
பிறப்பு1950 (1950)
இறப்பு (அகவை 68)
கொச்சி, கேரளம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1977–2018
பெற்றோர்கள்
வாழ்க்கைத்
துணை
இலலிதா
பிள்ளைகள்2

கலாசலா பாபு (Kalasala Babu) (1950-14 மே 2018) ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் மேடை மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்தார்.

மேடையில்

[தொகு]

கல்லூரியில் படிக்கும்போது வானொலி நாடகங்களில் பாபு நடித்து வந்தார். 1973 இல் பட்டம் பெற்ற பிறகு, பாஞ்சஜன்யம் என்ற மலையாள நாடகத்தில் நடித்தார். அதில் இவரது நடிப்பு அனைவரலும் பாராட்டப்பட்டது. பின்னர், பாபுவுக்கு இரண்டு ஆண்டுகள் காளிதாசாகலா கேந்திரம் எனும் நாடக நிறுவனத்தில் நடித்தார். மேலும் மறைந்த ஓ. மாதவன் மற்றும் கே. டி. முகமது ஆகியோர் இவரை அடிக்கடி நடிக்க வைத்தனர்.[1]

1977 ஆம் ஆண்டில் இனயே தேடி என்ற தனது முதல் மலையாளத் திரைப்படத்தில் நடித்தார். பிறகு, பாபு தனது கலாசாலா என்ற தனது சொந்த நாடகக் குழுவை திருப்பூணித்துறையில் தொடங்கினார். அதன் பிறகு இவர் கலாசாலா பாபு என்று அழைக்கப்பட்டார். மேலும் திலகன் மற்றும் சுரசு போன்ற கலைஞர்கள் இவரது நாடகத்தில் நடித்து வந்தனர். சுரசு எழுதிய தலவட்டம் என்ற நாடகத்துடன் இந்த குழு தனது மேடை நிகழ்ச்சியைத் தொடங்கியது. இது ஒரு பெரிய வெற்றியாக மாறியது. பி. ஜே. ஆண்டனி, சிறீமூலநகரம் விஜயன், என். என். பிள்ளை போன்ற புகழ்பெற்ற நபர்களால் மொத்தம் ஒன்பது நாடகங்கள் மேடையேறியது. இந்தக் குழு 1980 வரை செயல்பட்டது.

பின்னர், பாபு சில ஆண்டுகள் நாடக நிறுவனமான சாலக்குடி சாரதியுடனும் பணியாற்றினார்.[1]

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி

[தொகு]

1977 ஆம் ஆண்டில் ஜான் பால், ஜார்ஜ் கிட்டோ, கலூர் டென்னிஸ் மற்றும் ஆண்டனி ஈஸ்ட்மேன் ஆகியோரின் முதல் முயற்சியான இனயே தேடி படத்தில் பாபுவுக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்காக இவர் சில்க் ஸ்மிதாவுடன் இணைந்து நடித்தார். இது தோல்வியடைந்தது.[1]

1999 ஆம் ஆண்டின் இறுதியில், 13 வாரங்கள் ஒளிபரப்பப்பட்ட கலா என்ற தொலைக்காட்சி தொடரில் பாபு நடித்தார். இரௌடி தாசப்பன் என்ற இவரது கதாபாத்திரம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 28 தொடர்களில் பாபு நடித்தார்.[1]

2003 ஆம் ஆண்டில் கஸ்தூரிமான் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய பாபு, பின்னர் பல படங்களில் கதாபாத்திரங்கள் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்தார். மேலும் தனது நடிப்பிற்காக அங்கீகாரம் பெற்றார், என். எஃப். வர்கீஸ் மற்றும் நரேந்திர பிரசாத் போன்ற மறைந்த நடிகர்கள் நடித்துவந்த பாத்திரங்களை இவர் நிரப்பினார்.[1] திலீப்பின் தந்தையாக லயன் என்ற படத்தில் நடித்தார். பாபு பிரபலமான மலையாளத் தொடரான அம்மாவில் ஓய்வுபெற்ற நீதிபதி பூமங்கலத்தே கோபிநாத மேனனாக நடித்தார். இது 2012 முதல் 2015 வரை ஏசியாநெட் தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பப்பட்டது.

சொந்த வாழ்க்கை

[தொகு]

கதகளி நாட்டியக் கலைஞர் கலாமண்டலம் கிருட்டிணன் நாயர் மற்றும் மோகினியாட்டக் கலைஞர் கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா ஆகியோருக்கு பாபு பிறந்தார்.[1] இவரது சகோதரிகள் சிறீதேவி ராஜன் மற்றும் கலா விஜயன் மற்றும் இவரது மருமகள் சுமிதா இராஜன் ஆகியோரும் மோகினியாட்டம் கலைஞர்கள் ஆவர்.

இலலிதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசுவநாதன் என்ற மகனும் சிறீதேவி என்ற மகளும் உள்ளனர்.

இறப்பு

[தொகு]

இதய அடைப்பு காரணமாக[2] 14 மே 2018 அன்று தனது 68 வயதில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "From stage to screen". தி இந்து (Chennai, India). 23 September 2005 இம் மூலத்தில் இருந்து 19 May 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070519205814/http://www.hindu.com/fr/2005/09/23/stories/2005092300910200.htm. 
  2. "Actor Kalasala Babu in serious condition". mangalam.com.
  3. "ചലച്ചിത്ര നടൻ കലാശാല ബാബു അന്തരിച്ചു".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாசாலா_பாபு&oldid=4207970" இலிருந்து மீள்விக்கப்பட்டது