கலாகௌமுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலாகௌமுதி என்பது 1990 முதல் மும்பையில் வெளியாகும் மலையாள இதழ். திருவனந்தபுரத்தில் உள்ள கலாகௌமுதி பப்ளிக்கேசன் இதை பதிப்பித்து வெளியிடுகிறது. அக்காலத்தில் மும்பையில் வசித்த மலையாளிகளுக்கு கேரளத்தைப் பற்றி அறியவும், மலையாளத்தில் புதிய சொற்களைப் படித்தறியவும் துணைபுரிந்தது.

சரித்ரம்[தொகு]

1911-ல் சி. வி. குஞ்ஞிராமன் கேரளத்தில், கேரளகௌமுதியை நிறுவினார். கே. சுகுமாரன், இதன் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது மகன் எம். எஸ். மணி, 1970-களில் கலாகௌமுதி பப்ளிக்கேஷன்சு ப்ரைவட் லிமிட்டடு என்ற அச்சகத்தை கேரளத்தில் நிறுவினார். "கலாகௌமுதி ஆழ்ச்சப்பதிப்பு", "கத", "வெள்ளிநட்சத்திரம்", "ஆயுராரோக்யம்" ஆகியவற்றை வெளியிட்டார்.

1970-80களில் லட்சக்கணக்கான மலையாளிகள், வேலை காரணமாக மும்பைக்கும் அகமதாபாத், சூரத், நாசிக், வாபி, தானே, கல்யாண், பூனே ஆகிய நகரங்களுக்கும் சென்று குடியேறினர். அரசியல், பொருளாரம், அரசு செய்திகள் உள்ளிட்டவற்றை வழங்கும் மலையாள நாளேடு அக்காலத்தில் இல்லை. இதன் காரணமாக, மகாகேரளம் என்ற மலையாள நாளேடு மும்பையில் தொடங்கப்பட்டது. இதன் பின்னர், விஜு. வி. நாயரின் கலாகௌமுதி தொடங்கப்பட்டது. டெ [1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாகௌமுதி&oldid=1711491" இருந்து மீள்விக்கப்பட்டது