கலவை முறைத் தத்துவம்
Appearance
வெப்பவியக்கவியலில் கலவை முறைத் தத்துவம் (method of mixtures) என்பது ஒரு குறிப்பிட்ட தொகுதியிலிருந்து வெப்பம் வெளியேறாமலும், வெளியேயிருந்து வெப்பம் உள்ளே செல்லாமலும் இருக்கும் நிலையில், அத்தொகுதியிலுள்ள சூடான பொருள் இழக்கும் வெப்பம் குளிர்ந்த நிலையிலுள்ள பொருள் பெற்ற வெப்பத்திற்குச் சமமாகும் என்கிற தத்துவமாகும். இத் தத்துவம் கலோரிமீட்டர்களில் பயன்படுகிறது.