கலப்பு ஊறுகாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலப்பு ஊறுகாய்

கலப்பு ஊறுகாய் (Mixed pickle) என்பது கலவை ஊறுகாய் ஆகும். இந்த ஊறுகாய் பல்வேறு காய்கறிகள் கலந்து தயாரிக்கப்படுகிறது. கலப்பு ஊறுகாய் மற்ற ஊறுகாய்களைப் போலவே உண்ணப்படுகிறது. பல்வேறு உலக உணவு வகைகளில் கலப்பு ஊறுகாய் காணப்படுகிறது.

அமெரிக்க உணவில், கலப்பு ஊறுகாய் பொதுவாக வெள்ளரி, பூக்கோசு, வெங்காய துண்டு, குடை மிளகாய், மசாலா, பூண்டு, வெந்தயம், மிளகாய், மிளகுத்தூள், மற்றும்புளிங்காடி கலந்து தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை போன்ற இனிப்புப் பொருள் சேர்க்கப்படுவதைப் பொறுத்து கலப்பு ஊறுகாய்கள் இனிப்பு அல்லது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.[1]

இங்கிலாந்து உணவுகளில், கலப்பு ஊறுகாய்களில் பொதுவாகச் சிறிய முழு வெங்காயம், கெர்கின்ஸ் மற்றும் பூக்கோசு சேர்க்கப்படுகிறது.[2]

இந்திய உணவு வகைகளில், கலப்பு ஊறுகாயில் பழங்கள் (உதாரணமாக, மாம்பழம் மற்றும் தேசிப்பழம்) மற்றும் காய்கறிகள் அதிகமாக இருக்கும். இந்திய ஊறுகாய் மேற்கத்திய ஊறுகாய்களைப் போலல்லாமல் எண்ணெயைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. மேலும் புளிங்காடிக்குப் பதிலாக எலுமிச்சை சாறு அல்லது வேறு சில அமிலங்களைப் புளிப்புப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். மேலும் இதில் இடத்திற்குத் தக்கவாறு வேறுபாடுகள் உள்ளன.[3]

கலப்பு ஊறுகாய்களுக்கான சமையல் குறிப்புகளைச் சீனச் சமையல் வகைகளில் காணலாம்.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.ams.usda.gov/AMSv1.0/getfile?dDocName=STELDEV3010786 பரணிடப்பட்டது 2012-06-14 at the வந்தவழி இயந்திரம் ams.usda.gov
  2. http://www.bbc.co.uk/dna/h2g2/A3100168 bbc.co.uk
  3. http://indianfoodsco.com/Submit/Pickles.htm பரணிடப்பட்டது 2010-01-18 at the வந்தவழி இயந்திரம் indianfoodsco.com

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலப்பு_ஊறுகாய்&oldid=3365665" இருந்து மீள்விக்கப்பட்டது