கலப்பு உரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலப்பு உரம்[தொகு]

கலப்பு உரம்

தாவரங்கள் உயிர் வாழ போதிய சத்துணவு தேவை. கலப்பு உரம் (Compost) தாவரங்களுக்கு வேண்டிய உணவை சுலபமாக உட்கொள்ளும் கூழ்ம(Colloid) நிலையில் மக்கியப் பொருளாகக் (Humus) கொடுக்கிறது.

தயாரிக்கும் முறை[தொகு]

இலை,தேவையற்ற கறியாய், புல், பூண்டு, பறவைகளின் எச்சம், கால்நடைகளின் கழிவுப் பொருள்கள், சாம்பல் முதலியவை தேவை. (கம்போஸ்ட்டு தயாரிக்க மரம், தாள், பருத்தி, சணல் முதலியவை ஒவ்வாதவை). இவைகளைச் சேர்த்து சிறிது ஈரமாக்கி அமோனியம் சல்பேட்டு, சயனமைடு முதலியவைகளைச் சேர்த்து மண்ணுடன் கலந்து அடுக்குகளில் இடப்படுகிறது. அமிலத் தன்மையைக் குறைக்க சுண்ணாம்பையும் மண்ணுடன் சேர்க்கலாம். மழையில் நனையாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். சரியான முறையில் பாக்டீரியாக்களால் சிதைவு ஏற்படும்போது மிகையான வெப்பம் வெளிவரும். வெப்பநிலை 65o வரையில் உயரும். இவ்வெப்பத்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மடிந்து நல்ல மக்கிய கம்போஸ்ட்டு கிடைக்கும். அதிக அளவு காற்றும் வெயிலும் இருந்தால் கம்போஸ்ட்டு உலர்ந்து விடும். போதிய காற்றில்லாவிடில் வெப்பநிலை உயராது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பெருகி நைட்ரஜன் சத்தை சேதமடைய செய்யும். ஆகையால் கம்போஸ்ட்டை போதுமான காற்றோட்டமுள்ள குழியில் தயாரிப்பது நல்லது. வெப்பத்தை வெளிச்செல்லாமல் தடுக்க மேலடுக்கைக் குழைத்த மண்ணால் மூடுவது வழக்கம். வெப்ப நிலை உயர்ந்த பிறகு பல நாட்கள் விட்டு வைத்தால் கறுப்பாகிக் குழைந்து மக்கி நல்ல எருவாகிவிடும்.

மேற்கோள்கள்[தொகு]

  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலப்பு_உரம்&oldid=2723988" இருந்து மீள்விக்கப்பட்டது