கலப்பின நெல் மதிப்பீடு மையம், கூடலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலப்பின நெல் மதிப்பீடு மையம் என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள ஒரு நெல் மதிப்பீட்டு மையமாகும்.

இந்த மையத்தில் நெல்லின் வெப்ப உணர்வு பண்பக ஆண் மலட்டுவரிசைகளில் ஏற்படும் கருவள மாற்ற நிலைகள் மற்றும் மாறுநிலை வெப்பம் ஆகியவற்றைப் பற்றி மேல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆறு டிஜிஎம்எஸ் கோடுகளின் கருவள தன்மை மற்றும் இருவரிசை நெல் கலப்பினத்தை உருவாக்குவதற்காக இந்த 6 வரிசைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை வெப்ப மண்டல உணவு பாதுகாப்புக்காக வளரும் திறன் மரபியல் முறையாகக் கருதப்படுகிறது. இங்கு கண்டறியப்பட்ட 17 இணையான டிஜிஎம்எஸ் வரிசைகள் மற்றும் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், நெல் ஆராய்ச்சி இயக்ககம், ஹைதராபாத்திலிருந்து பெறப்பட்ட இனப்பெருக்கவரிசைகள் ஆகியவை மகரந்தத்துாள் மற்றும் பூங்கிளை வளத்துக்காக மதிப்பிடப்படுகிறது..[1]

மேற்கோள்கள்[தொகு]