உள்ளடக்கத்துக்குச் செல்

கலந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலந்தரால் மூக்கனாங்கயிறு இடப்பட்ட நிலையில் ஒரு கரடி

கலந்தர் மக்கள் என்பவர்கள் கரடிகளை காட்டி வித்தை காட்டும் ஒரு நாடோடி சமூகத்தினர் ஆவர். இவர்கள் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் பாரசீகத்தில் இருந்து வந்த முஸ்லீம்கள் ஆவர். இவர்கள் வேட்டைக்காரர்களிடம் இருந்து கரடி குட்டிகளை வாங்கி அவற்றை பழக்கி வைத்திருப்பர். பழுக்க காச்சிய இரும்பு கம்பியால் கரடிகுட்டிகளின் கோரைப்பற்களை உடைத்து, அதன் மூக்கில் துளையிட்டு மூக்கனாங்கயிற்றை மாட்டி விடுகின்றனர். ஆண் கரடிகளை கட்டுப்பாட்டில் வைக்க அவற்றிற்கு ஆண்மை நீக்கம் செய்துவிடுகின்றனர். இந்த கரடிகளை அழைத்துக்கொண்டு ஊரூராகச் சுற்றும் இவர்கள் கரடியின் முடி, நகம் ஆகியவற்றை வைத்திருப்பது நற்பேறு என்ற நம்பிக்கை வைத்திருக்கும் மக்களிடம் விற்றும், கரடிகளை காட்டியும் வாழ்கினறனர். தற்போது இவர்களிடம் இருந்து கரடிகளை மீட்டு ஆக்ராவில் காப்பகம் அமைத்து பாதுகாக்க வைல்ட் லைப் எஸ்.ஓ.எஸ் என்ற விலங்குகள் நல அமைப்பு முயற்சி எடுத்து இந்த கலந்தர் மக்களுக்கு மறுவாழ்வு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.[1]

வெளி இணைப்புகள்

[தொகு]

வைல்ட் லைப் எஸ். ஓ. எஸ் இன் இணையதளம் பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஆக்ராவில் கரடிகளுக்கு உலகில் மிகப்பெரிய காப்பகம், தி இந்து (தமிழ்) 15 சனவரி, 216
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலந்தர்&oldid=3238724" இலிருந்து மீள்விக்கப்பட்டது