கற்பூர மரம்
Appearance
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கற்பூரம் (தாவர வகைப்பாட்டியல்: Cinnamomum camphora) நறுமணம் வீசும் வெண்மையான படிகம் போன்ற பொருள். ஜப்பானியர்களால் இது தெய்வீகமானது என்று கருதப்படுகிறது. இது கற்பூர மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது, செயற்கையாகவும் தயாரிக்கப்படுகின்றது. இதைக் கொண்டு செல்லுலோஸ், வெடி மருந்துப் பொருள், தொற்று தடை மருந்து, மெருகெண்ணெய் முதலியவற்றைத் தயாரிக்கின்றனர். பூச்சி அரிக்காமல் தடுக்கும் மருந்துப்பொருட்களிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள். கற்பூர மரத்தின் தாவரவியல் பெயர் சின்னமோமம் கம்போரா (cinnamomum camphora) என்பதாகும். இதன் தாயகம் சீனா. ஜப்பானில் பல தீவுகளில் காடுபோல் இவை வௗர்ந்திருக்கின்றன. முன்னர் கற்பூர மரத்தின் பட்டைகளிலிருந்து கற்பூரம் எடுத்தனர். இப்போது மரப்பட்டை, இலை, மரம் ஆகியவற்றிலிருந்து கற்பூரம் எடுக்கப்படுகிறது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ புத்தகம்; தாவர உலகிலே 100, ஆசிரியர் என்.சீனிவாசன்,பக்கம்;184