கற்பனைக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கற்பனைக்காலம் என்பது தகவல் யுகத்திற்கும் அடுத்து நிகழும் ஒரு கருத்தியல் காலம் ஆகும். சமூகப் பொருளாதார மதிப்புகளை படைப்பதில் சிந்தனையும், பகுப்பாய்வும் முக்கியத்துவம் பெறும். தகவல் மற்றும் செய்திகளின் காலத்திற்கும், படைப்பாற்றலும் கற்பனைத்திறனும் கோலோச்சும் கற்பனை காலத்திற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இதன் முக்கிய கருத்து என்னவென்றால், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களாகிய மெய் நிகர் உண்மை, பயனர் உருவாக்கும் உள்ளடக்கம் மற்றும் யூடியூப் ஆகியவை மனிதர்கள் தாம் ஒருவர் மற்றொருவருடன் கொள்ளும் செய்யாற்று அனுபவங்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு பொருளாதார, சமூகம் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குகிறார்கள் என்பதையும் மாற்றியமைக்கும், வலிமை படைத்தவை என்பதாகும். இதில், நாம் உற்றுநோக்கவேண்டிய கருத்து என்னவென்றால், தற்போது எழுச்சிபெற்று வரும் அதிவேக மெய்நிகர் உண்மை, மின்வெளி மற்றும் மெட்டா வசனம் ஆகியவை தற்கால வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், காணொளி உருவாக்குனர்கள், நடிகர்கள் ஆகியவர்கள் நம் கலாச்சாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் அடித்தளமாகக் கருதும் பகுத்தறிவு சிந்தனையை கற்பனைத்திறன் விரைவில் பின்னோக்கித் தள்ளி முக்கியத்துவம் பெறும் என்பதே ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பனைக்_காலம்&oldid=2341944" இருந்து மீள்விக்கப்பட்டது