கற்பக விருட்ச வாகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்பக விருட்ச வாகனம்
பராய்துறைநாதர் சிவாலயத்தில் உள்ள கற்பக விருட்ச வாகனம்
பராய்துறைநாதர் சிவாலயத்தில் உள்ள கற்பக விருட்ச வாகனம்
உரிய கடவுள்: சிவபெருமான், திருமால்

கற்பக விருட்ச வாகனம் என்பது என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.[1]

கற்பக மரம் தேவலோகத்தில் உள்ள ஐந்து மரங்களில் ஒன்றாகும். இம்மரம் கேட்டதை தரக்கூடியது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. இறைவன் கற்பக மரத்தினைப் போன்று அடியார்கள் நினைத்தை தரக் கூடியவன் என்ற வகையில் கற்பக விருட்ச வாகனத்தில் உலா செல்கிறார். இதனை விருட்ச வாகனம் என்றும் கூறுவர். [2]

கோவில்களில் உற்சவ விழா[தொகு]

  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் நகரில் அமைந்துள்ள சௌந்தரநாயகி அம்மன் உடனுறை புஷ்பவனேஸ்வரர் சுவாமி சிவாலயத்தில் பங்குனி உற்சவ பெருவிழாவின் இரண்டாம் திருநாள் அன்று கற்பக விருட்ச வாகனத்தில் புஷ்பவனேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் உலா வருகிறார்.
  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் நான்காம் நாளில் வெள்ளி கற்பக விருட்சம் வாகனத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசுவரர் உலா வருகின்றனர்.
  • திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் உற்சவர் மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் உலா வருகிறார்.
  • திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழாவில் மூன்றாம் நாள் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

இவற்றையும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. காரைக்கால் கைலாசநாதர் கோவில் கற்பக விருட்ச வாகனம் வெள்ளோட்டம்
  2. திருவிழாக்களின் தத்துவம் - கே. சுவர்ணா - நக்கீரன் - 01-05-14[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பக_விருட்ச_வாகனம்&oldid=3700841" இலிருந்து மீள்விக்கப்பட்டது