கற்பகா
கற்பகா, 2018 ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பால் என்பதில் அறிமுகமான ஒரு மாற்றுப் பாலின தமிழ் நடிகையாவார். இவர், இந்திய அளவிலும், தமிழக அளவிலும், முதன்முதலாக மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]மேற்கு தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த கற்பகா, அவரது குடும்பத்திற்கு ஒரே குழந்தையாவார். மாற்றுப்பாலினத்தவராக மாற விரும்பி தனது பதினேழாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி மும்பை மாநகரத்திற்கு சென்றார். பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்துள்ள அவர் அங்கே ஒரு அழகு நிலையத்தில், அழகுக்கலை நிபுணராக பணியாற்றினார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஊருக்கு திரும்பி அவரது குடும்பத்தை சந்திக்க சென்ற இவரை, முதலாவது ஏற்றுக்கொள்ள மறுத்தது ஆனால், படிப்படியாக இவரது பாலினத் தேர்வை ஏற்றுக்கொண்டது..[3][4]
பால் (திரைப்படம்)
[தொகு]பாரம்பரியமாகவே, இந்திய திரைப்படங்களில் திருநங்கைகள் மோசமாகவும், நகைச்சுவையாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில்,[5] முதல்முறையாக கற்பகா,ஒரு அறிவார்ந்த நபராகவும், கதாநாயகியாகவும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அவரது உண்மையான வாழ்க்கையைப் போலவே திரைப்படத்திலும், தனது காதலருக்கு அவரது பால் அடையாளத்தை வெளிப்படுத்துவதில் உள்ள சிரமத்தை அற்புதமாக நடித்துள்ளார். [5] திருநங்கைகளை குடும்பங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்தப் படம் வலியுறுத்துகிறது.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ indiaglitz.com பரணிடப்பட்டது 2008-07-10 at the வந்தவழி இயந்திரம், 9 July 2008, "MAN-TURNED-WOMAN to star in a film"
- ↑ tamilmegatube.com பரணிடப்பட்டது 27 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம், 8 July 2008, "Transgender in lead role!"
- ↑ scribd.com, reprint of 19 August 2008 "Ergo" article "The Other Gender"
- ↑ by Firoze Shakir, firozeshakir.com பரணிடப்பட்டது 17 பெப்பிரவரி 2012 at the வந்தவழி இயந்திரம், 18 May 2008, "A beautiful story titled Paal", Retrieved 26 September 2008
- ↑ 5.0 5.1 5.2 kollywoodtoday.com, 18 May 2008, "A beautiful story titled Paal"
- ↑ timesofindia.com, 8 July 2008, "Transgender to play lead in Tamil film"