கற்க கற்பிக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

தமிழ் இதழியல் வரலாற்றில் 'கற்க கற்பிக்க" என்னும் இதழ் தமிழ் மொழி, ஆய்வு, சமூகம் என்ற தளத்திலே கட்டுரைகளைப் பதிபித்து தமிழ் மக்கள் வாழுமிடமெங்கும் தனது பங்களிப்பைச் செய்து வருகிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்ற அளவிலே ஆண்டுக்கு நான்குன் முறை வெளியிடப்படுகிறது. முனைவர் கோ.பெரியண்ணன் அவர்களை தலைமை ஆசிரியராகக் கொண்டூ, முனைவர் அரிகிருஷ்ணன், முனைவர் முருகையன், முனைவர் இராமச்சந்திரன், முனைவர் ரேணுபத்மா, முனைவர் சுலோச்சனா ஆகியோர் ஆசிரியர் குழுவாக இணைந்து தமிழ் மொழியின் வளர்ச்சி, எதிர்காலநிலை, உலக அளவிலே வாழும் தமிழர்களுக்கு மொழியைக் கற்பித்தல் ஆகிய பணிகளைத் தரமாகச் செய்து வருகிறது.

தமிழர்களின் பண்பாடு[தொகு]

தமிழர்களின் பண்பாட்டை உலகுக்கு மீட்டுருவாக்கம் செய்தல் என்ற அடிப்படையில், 2014 ஆம் ஆண்டு ஜூலை 23, 24, 25 தேதிகளில் உலகளாவிய தமிழ் மாநாட்டை மொரீசியஸ் தீவில் நடத்தியது.

கற்க கற்பிக்க இதழ் பதிப்பு மற்றும் ஆலோசனை குழுக்களின் பங்களிப்பு[தொகு]

இவ்விதழ் சிறப்பாக நடைபெற முனைவர் இரத்தின சபாபதி பதிப்பாளராகவும், முனைவர் பொற்கோ, முனைவர் பன்னீர்செல்வம், முனைவர் சேதுபதி பாண்டியன், முனைவர் சீத்தாலெட்சுமி, முனைவர் வீரப்பன் ஆய்வு மற்றும் ஆலோசனைக் குழுவாகவும் செயல்பட்டு தமிழர்களின் நாகரிகம், பண்பாட்டினைத் தொடர்ந்து உலகுக்குப் பறைசாற்றும் பொறுப்பைத் தொய்வில்லாமல் செய்து வருகின்றனர்.

சான்றாதாரம்[தொகு]

கற்க கற்பிக்க-செப்டம்பர்-2014.முனைவர்.பி.இரத்தின சபாபதி(பதிப்பாசிரியர்). சென்னை-600024.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்க_கற்பிக்க&oldid=2722809" இருந்து மீள்விக்கப்பட்டது