உள்ளடக்கத்துக்குச் செல்

கற்குழம்புப்பாறையாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கற்குழம்புப்பாறையுருவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட காங்தீசு பாதோலித்தைக் காட்டும் புவியுரு வரைபடம்.

கற்குழம்புப்பாறையாக்கம் (Magmatism) என்பது புவியொத்த கோள்களில் அவற்றின் வெளிப்புற அடுக்குகளின் புறப்பரப்பிலோ அல்லது வெளிப்புற அடுக்குகளுக்கிடையிலோ நடைபெறக்கூடிய கற்குழம்பின் பாறைத்தாது அமைவாகும். இவ்வாறான அமைவே பின்னர் தீப்பாறையாக திண்மமாகிறது. இச்செயல்முறையானது கற்குழம்புப் பாறைச் செயல்பாடு அல்லது தீப்பாறைச் செயல்பாட்டின் காரணமாக நடைபெறுகிறது. இதில் கற்குழம்பு அல்லது எரி கற்குழம்பு ஆகியவற்றின் உருவாக்கம், உட்குடைவு, வெளிக்குடைவு ஆகியவை நிகழ்கின்றன. எரிமலையாக்கம் என்பதே கற்குழம்புப் பாறையாக்கத்தின் வெளிப்புற வெளிப்பாடேயாகும்.

இச்செயல்பாடே மலை உருவாக்கத்திற்குக் காரணமான மிக முக்கியச் செயல்பாடாகும். கற்குழம்புப்பாறையாக்கத்தின் இயல்பானது கண்டத்தட்டு அமைவுகளைச் சார்ந்துள்ளது.[1] உதாரணமாக, எரிமலைப் படிகக் கண்ணாடி கற்குழம்புப் பாறையாக்கமானது தீவு வளைவுகள் உருவாக்கத்தோடு தொடர்புடையவை ஆகும். எரிமலைப் பாறை வகை கற்குழம்புப்பாறையாக்கமானது நடுக்கடல் முகடுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilson M. (2012). Igneous petrogenesis. Springer. pp. 3–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789401093880.