கறுவா (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Cinnamon
கருவா இலையும் பூவும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. zeylanicum
இருசொற் பெயரீடு
Cinnamomum zeylanicum
J.Presl

கருவா மரம் அல்லது கறுவா மரம் (Cinnamomum zeylanicum) லோராசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மரமாகும். இம்மரம், 10-15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது இலங்கையையும், தென்னிந்தியாவையும் தாயகமாகக் கொண்டது. இம் மரத்தின் பட்டை உணவுகளுக்கான வாசனைப் பொருட்களாகப் பயன்படுகின்றது. 7 முதல் 18 செ.மீ வரை நீளமான இதன் இலை இரு புறமும் கூரான நீள்வட்ட வடிவம் கொண்டது. பச்சை நிறமானதாகக் காணப்படும் பூக்கள் விரும்பத்தகாத மணம் கொண்டவை. ஊதா நிறமான இதன் பழங்கள் சிறியவை, ஒரேயொரு விதை மட்டுமே கொண்டவை.

கருவாப்பட்டை கட்டு

உலகில் மிக சிறந்த கருவா இலங்கையில் வளர்ந்த போதும். இது யாவாவில் உள்ள தெல்லிச்சேரி, சுமாத்திரா, மேற்கு தீவுகள், பிரேசில், வியட்னாம், மடகஸ்கார், மற்றும் எகிப்திலும் வளர்கிறது. இலங்கையில் விளையும் மிகவுயர்தர மஞ்சள் கலந்த மண்நிற கருவாவானது மிக மெல்லிய மெருமையான பட்டைகள், உயரிய மேன்மையான வாசனை, விசித்திரமான இனிமை, இனிமை கலந்த சுவையை கொண்டுள்ளதோது. இந்த சுவைக்குகாரணமாக அமைவது இதில் 0.5 – 1% என்ற விகிதத்தில் கலந்துள்ள வாசனை எண்ணெயாகும். இது வணிகப்பொருளாகவும் பயன்படுகிறது. கருவா மிக புராதன காலம்தொட்டே வேந்தர்களுக்கும், பெரும்கிழார்க்கும் உரிய பரிசு பொருளாக புராதன தேசங்களில் போற்றபட்டு வந்துள்ளது. இது எரோடோட்டசு, மறறும் பல செம்மொழி எழுத்தாளர்களார் குறிப்பிட படுகிறது.

இலங்கைக்கு ஒல்லாந்தரை கொனர்ந்து அங்கே ஒரு வியாபார அரனை 1638ம் ஆண்டு அவர்கள் அமைக்க கருவாவே காரணமானது. ஒரு ஒல்லாந்து கலபதி "அத்தீவின் கரைகள் கருவாவினால் நிரம்பியுள்ளது" எனக் குறித்துள்ளார், ஆசியாவிலேயே மிக சிறந்தது மட்டுமல்லாது, அத்தீவின் காற்றுகீழ் புரத்தே எட்டு இலிகுகள் வெளியே உள்ளபோது கூட இதன் சுகந்தத்தை கடலில் சுவாசிக்கலாம் [1]

கருவா cassiaயாவை விட விலை உயர்ததாக காணப்படுவதோடு, ஒப்பீட்டுரீதியாக கடுமையான சுவையை கொணட cassiaயாவுக்கு மாற்றிடாகவோ அல்லது அதனுடன் சேர்த்தோ பயன்படுத்தபடுகிறது. இவ்விரண்டினுடைய பட்டைகளும் முழுமையான நிலையில் உள்ளபோது எளிதில் வேறுபடுத்த கூடியதாகவுள்ளதோடு இவற்றின் பண்புகளும் வித்தியாசமாக உள்ளது. தூளாக்கிய பட்டைகளை மீது சிறிது அயடீனை தூவும் போது உயர் தரத்திளான தூய கருவாவில் மிக சிறிய மாற்றமே நிகழ்கிறது. ஆனால் cassia கலந்துள்ள போது கலப்பிற்கு சமானமான அளவில் தூள் கடும் நிலநிறம் பெறுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. " Braudel, Fernand. The Perspective of the World, Vol III of Civilization and Capitalism. 1984.  215).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுவா_(மரம்)&oldid=2748069" இலிருந்து மீள்விக்கப்பட்டது