கறுவாக் காட்டுத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கறுவாக் காட்டுத் தமிழர் எனப்படுவோர் கொழும்புக் கறுவாக் காட்டுப் பகுதியில் வசித்த வசதி படைத்த தமிழர்கள் ஆவார்கள். இவர்கள் இலங்கையில் பல துறைகளில் செல்வாக்கு செலுத்தியவர்கள் ஆவார்கள். இவர்களும் வசதி படைத்த சிங்கள் ஆங்கிலேயர்களும் ஒரே சமூக வட்டங்களில் இயங்கியவர்கள். இதர இலங்கைத் தமிழர்களில் இருந்து இவர்கள் பலரின் ஆங்கில வாழ்க்கை முறைக்கும், ஆங்கில வழிக் கல்வியும் வேறுபட்டது. எனினும் இலங்கை இனக்கலவரங்களால் இவர்களும் தாக்கப்பட்டனர்.