கறுப்பு டால்பின் சிறைச்சாலை
அமைவு | 51°9′20″N 54°59′35″E / 51.15556°N 54.99306°E |
---|---|
நிலை | இயங்குகிறது |
கைதிகள் எண்ணிக்கை | 700 |
நிருவாகம் | நடுவண் அரசு தண்டனை சேவை |
கறுப்பு டால்பின் சிறைச்சாலை (Black Dolphin Prison, உருசியம்: Чёрный дельфин, ஒ.பெ சியோர்னிய் டெல்ஃபின்) எனப் பொதுவாக அழைக்கப்படும் சிறைச்சாலை உருசியாவின் ஒரன்பூர்கு மாகாணத்தில் சோல்-இலேத்சுக் நகரில் அமைந்துள்ளது. நடுவண் அரசு நிறுவனமான இது "உருசியக் கூட்டாட்சியின் தண்டனை குடியேற்றம் எண். 6" ஆகும். இது கசக்கசுத்தானுடனான உருசிய எல்லையில் அமைந்துள்ளது.[1] இந்த சிறைச்சாலை உருசியாவிலேயே மிகவும் பழமையான ஒன்றாகும், அத்துடன் ஒரன்பூர்கு மாகாணத்தில் ஆயுள் தண்டனைக் கைதிகளை ஏற்றுக்கொண்ட முதல் சிறைச்சாலைகளில் ஒன்றாகும். இதன் நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள கைதிகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு கருப்பு டால்பினைச் சித்தரிக்கும் சிற்பத்திலிருந்து இது அதன் அதிகாரப்பூர்வமற்ற பெயரைப் பெற்றது.
தொடக்கத்தில் இச்சிறைச்சாலை குறைந்தபட்சம் 1745 முதல், கடின உழைப்புடன் கூடிய ஆயுள் தண்டனைக் கைதிகளின் ஒரு சிறையாக இருந்தது. 1773 இல் புகச்சோவ் கிளர்ச்சி அடக்கப்பட்ட பின்னர், கொள்ளையர்களை நாடு கடத்துவதற்கும் சிறைப்படுத்துவதற்குமான சிறைச்சாலையாகப் புதுப்பிக்கப்பட்டது. சிறைச்சாலையில் உருசியாவின் மிக மோசமான 700 குற்றவாளிகள் வரை உள்ளனர், இவர்களில் குழந்தைகளைத் துன்புறுத்துபவர்கள், கொலைகாரர்கள், தீவிரவாதிகள், நரமாமிசம் உண்பவர்கள், தொடர் கொலையாளிகள் போன்றவர்கள் உள்ளனர்.[2] கறுப்பு டால்பினில் உள்ள கைதிகள் அனைவரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Структурные подразделения." (Archive) Federal Penitentiary Service for the Orenburg Oblast. Retrieved on April 28, 2012. "В исправительной колонии содержатся осужденные к пожизненному лишению свободы."
- ↑ 2.0 2.1 "All Videos: Black Dolphin Prison பரணிடப்பட்டது 2012-08-22 at the வந்தவழி இயந்திரம்." தேசிய புவியியல் கழகம். Retrieved on April 28, 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Black Dolphin Prison". fsin.su. Federal Penitentiary Service. Archived from the original on 2012-05-11.
- "Black Dolphin Prison (Inside: Russia's Toughest Prisons)". natgeotv.com/asia. National Geographic. Archived from the original on October 26, 2011.