கறுப்பு ஆப்பிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கறுப்பு ஆப்பிள் (Black Apple) என்று அழைக்கப்படுவது உவா நியூ ஆப்பிள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அரிதான வகைப் பழமாகும். இது திபெத்தில் வளர்கிறது. பரவலான கருத்துக்கு முரணாக இவ்வகை ஆப்பிள் கருநீல வண்ணமே கொண்டுள்ளனவே தவிர்த்து கறுப்பு நிறம் கிடையாது.[1]

பெயர்[தொகு]

கறுப்பு ஆப்பிள் என்று பரவலாக அழைக்கப்படும் இந்த பழத்தை கறுப்பு வைர ஆப்பிள் (மாண்டரின் : 黑钻石) என்றழைக்கின்றனர் சீன மக்கள். இது நிங்ச்சி என்கிற இடத்தில் வளர்க்கப்படுகிறது. உயரமான மலைப்பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய செடி வகையாக இவை இருக்கின்றன. உவா நியூ ஆப்பிள் குடும்பத்தைச் சேர்ந்த பிற ஆப்பிள் வகைகள் சிவப்பு வண்ணத்தில் இருப்பன. இதனால் அவற்றை சீனாவின் இனிமைச் சிவப்பு என்று அழைக்கின்றனர்.[2]

தோற்றம்[தொகு]

வெளிப்புறத் தோற்றம் கருநீல நிறத்தில் இருந்தாலும் உட்புறத்தில் பிற ஆப்பிள்களைப் போலவே வெண்மையான உட்பகுதியைக் கொண்டுள்ளது கறுப்பு வைர ஆப்பிள். இதன் அரிதான நிறத்திற்கு காரணம் வளரப்படும் தளத்தின் உயர்மட்டமாகவோ அதனால் அடிக்கடி படும் புற ஊதாக்கதிர்களின் தாக்கமாகவோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[3]

விலை[தொகு]

மிகவும் அரிதான பழமென்பதால் சந்தையில் மிகுதியான விலையில் இவ்வகை ஆப்பிள்கள் விற்கப்படுகின்றன. ஒரு ஆப்பிள் 50 யுவான் (≈564 ரூபாய்) என்கிற விலையில் விற்கப்படுகிறது. இருப்பினும் உழவர்கள் இந்த ஆப்பிளை விரும்பிப் பயிரிடுவதில்லை. இதற்குக் காரணம் இந்தவகை ஆப்பிள் பழுக்க எட்டு ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்பு_ஆப்பிள்&oldid=3115872" இருந்து மீள்விக்கப்பட்டது