கறுப்புப் பெட்டிச் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கறுப்புப் பெட்டி வரைபடம்

கறுப்புப் பெட்டிச் சோதனை ஆனது மென்பொருட் சோதனையில் ஓர் அங்கம் ஆகும். இவ்வழிமுறையில் சோதனையாளர் சரியான மற்றும் பிழையான உள்ளீடுகளைக் கொடுத்து சரியான வெளியீட்டை மென்பொருளானது தருகின்றதா என்று சோதிக்கப்படும். இச்செய்கையானது மென்பொருட் சோதனையில் எல்லாக் கட்டங்களிலுமே செய்யப்படுவது ஆகும். இச்செயன்முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படாத வசதிகளை வெளிக்கொண்டுவரக் கூடியதாக இருப்பினும் எல்லா வசதிகளும் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்த இயலாது.

பயனரின் உள்ளீட்டுச் சோதனை[தொகு]

பயனரின் உள்ளீட்டைச் சோதிப்பதாகும். எடுத்துக்காட்டாக வேண்டிய பொருட்களின் எண்ணிக்கையை 4.78, -7.99 என்றே விலையை -1 என்றோ உள்ளிட்டுச் சோதிப்பதாகும். வேறு எடுத்துக்காட்டுகளாக விலை எனக் கேட்கும் இடத்திலோ எண்ணிக்கை எனக் கேட்கும் இடத்திலோ சம்பந்தமில்லாத எழுத்துக்களை உள்ளீடு செய்து மென்பொருளின் நடத்தையை நோக்குவதாகும். எடுத்துக்காட்டாக "1.20.35", "Abc", "0.000001", and "999999999". இவ்வாறான சோதனைகள் ஒவ்வொரு பயனரின் உள்ளீட்டில் சோதிக்கப்படும்.

சில இடங்களில் 30 எழுத்துக்களை மாத்திரமே உள்ளீடு செய்யக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் 50 எழுத்துக்களையொ ஒருங்குறியில் அமைந்த தமிழ் எழுத்துக்களையோ உள்ளீடு செய்து மென்பொருளின் நடத்தை அவதானிக்கப்படும். இவ்வாறான சில சந்தர்பங்களில் பபர் ஓவபுளோ (buffer overflow) போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டி வரலாம்.

பெயர்க்காரணம்[தொகு]

கருப்பு வண்ணப் பெட்டியில் என்ன உள்ளது என்பது கண்ணுக்கு தெரியாது. அது போலவே உள்ளீட்டை வாங்கும் மென்பொருள் என்ன செய்கிறது என்பது தெரியாது. வெளிவரும் விடை மட்டுமே சரிபார்க்கப்படும்.

இவற்றையும் பார்க்க[தொகு]