கர்மாலா

ஆள்கூறுகள்: 18°25′N 75°12′E / 18.42°N 75.2°E / 18.42; 75.2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்மாலா
நகரம்
கர்மாலா is located in மகாராட்டிரம்
கர்மாலா
கர்மாலா
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் கர்மாலா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°25′N 75°12′E / 18.42°N 75.2°E / 18.42; 75.2[1]
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்சோலாப்பூர்
தாலுகாகர்மாலா
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்30.82 km2 (11.90 sq mi)
ஏற்றம்562 m (1,844 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்23,199
 • அடர்த்தி750/km2 (1,900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்திய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்413203
தொலைபேசி குறியீடு எண்02182
வாகனப் பதிவுMH-45

கர்மாலா (Karmala), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது சோலாப்பூருக்கு வடகிழக்கே 82 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இந்நகரம் கர்மாலா தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது 30.82 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 17 வார்டுகள் கொண்ட கர்மலா நகராட்சியின் மக்கள் தொகை 23,199 ஆகும். அதில் ஆண்கள் 11,905 மற்றும் 11,294 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 949 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். எழுத்தறிவு 87% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,535 மற்றும் 430 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 17,291 (74.53%), இசுலாமியர் 4,572 (19.71%), பௌத்தர்கள் 52 (0.22%), சமணர்கள் 1,087 (4.69%), மற்றும் பிறர் 1.04 % ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்மாலா&oldid=3504078" இலிருந்து மீள்விக்கப்பட்டது