கர்மவீர் சக்ரா விருது
| கர்மவீர் சக்ரா விருது | |
|---|---|
| விருது வழங்குவதற்கான காரணம் | இதுவரை யாரும் செல்லாத பாதையில் பயணித்து, சமூகத்தில் ஒரு மாற்ற அலையைத் தொடங்குவதன் மூலம் வெளிப்படும் அர்ப்பணிப்பையும் தளராத தைரியத்தையும் அங்கீகரித்தல். |
| இதை வழங்குவோர் | ஐக்கிய நாடுகள் சபை |
| நாடு | உலகம் முழுவதும் |
| முதலில் வழங்கப்பட்டது | 1984 |
| இணையதளம் | rexideas.com |
கர்மவீர் சக்ரா விருது (Karmaveer Chakra Award) என்பது சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன், உலகெங்கிலும் உள்ள தனிநபர்களுக்கு அவர்களின் அசைக்க முடியாத வீரத்திற்காக வழங்கப்படும் ஒரு உலகளாவிய குடிமக்கள் கௌரவமாகும்.[1][2]இது மாற்றத்தை உருவாக்குவதற்கான முன்முயற்சியான தன்னார்வ நடவடிக்கைகளுக்கான தேசிய பதக்கமான கர்மவீர் சக்ரா, 2008-09 ஆம் ஆண்டில் இந்திய அரசு சாரா நிறுவனங்களின் கூட்டமைப்பால் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து நிறுவப்பட்டது.[3] இந்த விருது, இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரான ஆ. ப. ஜெ.அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வழங்கப்படுகிறது. இவர் இந்த விருதுகளுக்கும் சர்வதேசத் தன்னார்வ ஒலிம்பியாட் போட்டிக்கும் தூதராக இருக்க முன்வந்தார்.[4]
விருதுகள்
[தொகு]இந்த விருது ஆண்டுதோறும் நவம்பர் மாத நடுப்பகுதியில், செயல்பாடு, கல்வி, தன்னார்வத் தொண்டு, சுகாதாரம் மற்றும் பிற பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க விருது பெற்றவர்களில் அனுபம் மிட்டல், தீபிகா நாராயண் பரத்வாசு, தேவிகா வைத், அரிஷ் ,[5] சேசன் பெர்னாண்டசு, சுருதி கபூர், மஞ்சு லதா கலாநிதி, அனுராக் சௌஹான், ஜோதி தவலே, காசோல்,[6] சுதா மேனன்[7] ஆகியோர் அடங்குவர். சூழலியல் விவசாயத்தை ஆதரிக்கும் விவசாயியான நாராயணப்பாவிற்கு ஒரு விருது வழங்கப்பட்டது.[8] தாராளவாத அரசியல் ஆர்வலர் ராகவேந்தர் அசுகானிக்கு விருது வழங்கப்பட்டது.[9] இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் வர்கீசு குரியன், கர்மவீர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற முதல் நபர் ஆவார்.[10] கலைஞரும் இளைஞர் மாற்றத்தை உருவாக்குபவருமான தனுசு சமாதருக்கும் கர்மவீர் சக்கரம் வழங்கப்பட்டது.[11]
விருதுகளின் படிநிலை
- கர்மவீர் சக்ரா தங்கம் - பரிந்துரைகள், ஆய்வாளா்கள் குழுவால் மட்டுமே முன்மொழியப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும். சுய பரிந்துரைகளோ அல்லது ஆய்வாளா்கள் மற்றும் குடிமக்களின் பரிந்துரைகளோ ஏற்றுக்கொள்ளப்படாது.
- கர்மவீர் சக்ரா வெள்ளி - பரிந்துரைகள் ஆய்வாளா்களால் மட்டுமே முன்மொழியப்படலாம் மற்றும் ஆய்வாளா்கள் குழுவின் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்படும். சுய பரிந்துரைகளோ அல்லது குடிமக்களின் பரிந்துரைகளோ ஏற்றுக்கொள்ளப்படாது.
- கர்மவீர் சக்ரா வெண்கலம் - உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆய்வாளா்கள் மற்றும் குடிமக்களும் பரிந்துரைகளை முன்மொழியலாம். சுய பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைகள் ஆய்வாளா்கள் குழுவின் விருப்பப்படி ஏற்றுக்கொள்ளப்படும்.
- கர்மவீர் புரசுகார்.
- கர்மவீர் ஜோதி.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "UNV Karmaveer Chakra" (PDF). United Nations Development Programme (in ஆங்கிலம்). Retrieved 2011-03-01.
- ↑ "UNV Karamveer Chakra". United Nations Development Programme (in ஆங்கிலம்). Retrieved 2012-03-11.
- ↑ "UNV Karamveer Chakra: National Medallion for proactive Volunteer Action". United Nations Development Programme (in ஆங்கிலம்). Retrieved 2012-03-11.
- ↑ "Abohar-based mountaineer gets Karmaveer Chakra Award". The Tribune (in ஆங்கிலம்). Retrieved 2025-03-04.
- ↑ "Equal rights activist Harish Iyer wins REX Karamveer Global Fellowship award". Daily News and Analysis (in ஆங்கிலம்). Retrieved 2014-11-21.
- ↑ "Happy Birthday Kajol: A playlist of Dilwale Dulhania Le Jayenge actress' best songs". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-08-05. Retrieved 2025-03-04.
- ↑ "Writing their way for a better tomorrow: Pune authors who made an impact in 2018". Hindustan Times (in ஆங்கிலம்). Retrieved 2018-12-30.
- ↑ "Dalit farmer awarded Karmaveer Chakra". The Times of India. 2023-11-28. https://timesofindia.indiatimes.com/city/vijayawada/dalit-farmer-wins-karmaveer-chakra-award-for-innovative-farming/articleshow/105546922.cms.
- ↑ India, The Hans (2021-04-28). "Young reformist awarded with 'Karmaveer Chakra'". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2025-03-04.
- ↑ "UN Karmaveer lifetime achievement award". Sikkim Express (in ஆங்கிலம்). Retrieved 2023-12-11.
- ↑ "Tanuj Samaddar's Art, Activism & Karmaveer Chakra Award Journey". The Influencers of India. November 11, 2024. Retrieved May 31, 2025.
- ↑ "Goan percussionist gets global award". The Goan EveryDay (in ஆங்கிலம்). Retrieved 2025-03-04.