கர்ப்பூரி தேவி
கர்ப்பூரி தேவி | |
|---|---|
| பிறப்பு | 1929 இரந்தி, மதுபானி, பீகார், இந்தியா |
| இறப்பு | 30 ஜூலை 2019 |
| பணி | நாட்டுப்புறக் கலைஞர் |
| அறியப்படுவது | மதுபானி ஓவியம், சுஜினி பூத்தையல் |
| விருதுகள் | சுஜினி கலைக்காக தேசிய விருது (1986) பீகார் மாநில விருது (1980) சிறந்த கைவினைக் கலைஞர் விருது (1983) |
கர்ப்பூரி தேவி (Karpoori Devi) (ஜூலை 2019) ஓர் இந்திய நாட்டுப்புறக் கலைஞர் ஆவார். மதுபானி ஓவியப் பாணிப் பாரம்பரியத்தில் ஓவியம் வரைவதற்கும், சுஜினி பாரம்பரியத்தில் துணிகளில் ஓவியத்தை உருவாக்குவதற்கும் பெயர் பெற்றவர்.[1] மதுபானி கலையை விற்பனை செய்வதன் மூலம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றவர். இவரது படைப்புகள் இந்தியாவிலும், யப்பான், ஆத்திரேலியா மற்றும் அமெரிக்காவிலும் சேகரிப்புகளில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன.
தொழில் வாழ்க்கை
[தொகு]தேவி, தனது தாயிடமிருந்து மதுபானி கலை நுட்பங்களைக் கற்றுக் கொண்டார். தனது குழந்தை பருவத்தில் உலர்ந்த மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட தரைகளிலும் மற்றும் சுவர்களிலும் ஓவியம் வரைந்து பழகினார்.[2] இவர், ஆரம்ப பள்ளிப்படிப்புக்குப் பிறகு படிக்கவில்லை.[3]
தேவி தங்கள் படைப்புகள் மற்றும் கலை பாணிக்காக பொது அங்கீகாரத்தைப் பெற்ற மதுபானியின் ஆரம்ப தலைமுறையைச் சேர்ந்தவர் (சில நேரங்களில் மிதிலா கலைஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்). மிஸ்ராவின் வேண்டுகோளின் பேரில், இந்திரா காந்தி பீகாரில் உள்ள மதுபானி பிராந்தியத்தில் அகில இந்திய கைவினை மன்றத்தின் ஒரு கிளையை நிறுவினார்.[4] கைவினை மன்றம் தேவி போன்ற கலைஞர்களை தங்கள் படைப்புகளை தரை மற்றும் சுவர்களில் இருந்து கையால் செய்யப்பட்ட காகிதத்திற்கு நகர்த்த ஊக்குவித்தது. இதனால் அவர்கள் இந்த ஓவியங்களை விற்கவும் முடிந்தது.[5] ஆரம்ப ஆண்டுகளில் சமூக எதிர்ப்பை எதிர்கொண்டார்.
தேவி தனது தொழில் வாழ்க்கையின் போது 1986 ஆம் ஆண்டில் ஜவுளித்துறை அமைச்சகத்தால் சுஜினி கலைக்கான தேசிய விருது, மத்திய அரசு 1980 ஆம் ஆண்டில் மதுபானி கலைக்கான பீகார் மாநில கலை விருது மற்றும் 1983 ஆம் ஆண்டில் 'சிறந்த கைவினைஞருக்கான' மாநில அரசு விருது உட்பட, பீகார் மாநில அரசு மற்றும் இந்திய மத்திய அரசிடமிருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[6]
தேவி தனது மைத்துனியும் சக மதுபானி கலைஞருமான மகாசுந்தரி தேவியுடன் நெருங்கிய தொழில்முறை கூட்டுறவைப் பேணி வந்தார்.[7] தனது மகளுக்கு மதுபானி மற்றும் சுஜினி கலையின் பாரம்பரியக் கலை நுட்பங்களை கற்பித்ததோடு மட்டுமல்லாமல், பத்மசிறீ விருது பெற்ற மதுபானி கலைஞரான துலாரி தேவிக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.[8]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கர்ப்பூரி தேவி பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் உள்ள இரந்தி கிராமத்தில் பிறந்து வாழ்ந்தார். இவரின் மகள் மோதி கர்ணும் மதுபானி கலைஞர் ஆவார். இவரின் கணவர் கிருஷ்ணந்த் தாஸும் பீகாரின் இரந்தி நகரில் ஓவியத்தைக் கற்பித்தார். நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்த கர்ப்பூரி தேவி 2019 இல் இறந்தார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sopam, Reena (31 July 2019). "Karpuri Devi, the eminent Mithila painting artist and creator of Mithila Museum in Japan passes away". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 25 June 2024. Retrieved 9 April 2023.
- ↑ Alok, Amit (31 July 2019). "कर्पूरी देवी: मधुबनी पेंटिंग काे दी अंतर्राष्ट्रीय पहचान, सात दशक की कला यात्रा पर लगा विराम" [Karpuri Devi: Gave international recognition to Madhubani painting, seven decade long art journey came to an end]. தைனிக் ஜாக்ரண் (in இந்தி). Archived from the original on 12 April 2023. Retrieved 26 February 2021.
- ↑ "स्मृति शेष: यूं ही नहीं दुनियाभर में छा गयी थीं कर्पूरी" [In memory: Karpoori did not become famous all over the world without any reason]. Hindustan (in இந்தி). 31 July 2019. Archived from the original on 9 April 2023. Retrieved 26 February 2021.
- ↑ Bsaies, Cheyenne (2 March 2018). "Mithila, Museums, and Memories: Travels in Bihar". Maxwell School of Citizenship and Public Affairs (in ஆங்கிலம்). Archived from the original on 27 October 2021. Retrieved 26 February 2021.
- ↑ Tripathi, Shailaja (22 November 2013). "Madhubani beyond the living rooms" (in en-IN). தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140204-172951/http://www.thehindu.com/features/metroplus/events/madhubani-beyond-the-living-rooms/article5380171.ece.
- ↑ "मधुबनी पेंटिंग की शिल्पी कर्पूरी देवी का निधन" [Madhubani painting artist Kapoori Devi passed away]. Hindustan (in இந்தி). 31 July 2019. Archived from the original on 11 April 2023. Retrieved 26 February 2021.
- ↑ "Madhubani art veteran Karpuri Devi dies at 94". Outlook India. Retrieved 26 February 2021. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "बिहार के दो दलित जिन्हें मिला पद्म श्री, जानें किस कला में हैं माहिर, 74 साल से नाच रहे हैं मांझी" [Two Dalits from Bihar who got Padma Shri, know which art they are expert in, Manjhi has been dancing for 74 years]. Jansatta (in இந்தி). 30 January 2021. Archived from the original on 13 February 2023. Retrieved 26 February 2021.
- ↑ Upadhyay, Prabhat (2 August 2019). "मधुबनी पेंटिंग की विख्यात शिल्पी कर्पूरी देवी का निधन, BJP नेता गिरिराज सिंह ने यूं दी श्रद्धांजलि" [Famous Madhubani painter Karpuri Devi passed away, BJP leader Giriraj Singh paid tribute to her]. NDTV India (in இந்தி). Archived from the original on 2 November 2019. Retrieved 26 February 2021.