கர்ப்பூரத் தைலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்ப்பூரத் தைலம்

Turpentine distilled at the Georgia Museum of Agriculture & Historic Village as it was done circa 1900
இனங்காட்டிகள்
9005-90-7
EC number 232-688-5
பப்கெம் 48418114
UNII XJ6RUH0O4G
பண்புகள்
C10H16
வாய்ப்பாட்டு எடை 136.24 g·mol−1
தோற்றம் Viscous liquid
மணம் Resinous
உருகுநிலை −55 °C (−67 °F; 218 K)
கொதிநிலை 154 °C (309 °F; 427 K)
20 mg/L
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 35 °C (95 °F; 308 K)
Autoignition
temperature
220 °C (428 °F; 493 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references
பைன் மரங்களிருந்து பால் திரட்டுதல்

கர்ப்பூரத் தைலம் (Turpentine) ஒருவகைப் பைன் மரப்பாலைத் திரட்டி, பிறகு அதைக் காய்ச்சி வடிகட்டி எடுக்கப்படுகிறது.[1]

பெறப்படும் முறை[தொகு]

தரையிலிருந்து ஓரடி உயரத்தில் பைன் மரத்தின் பட்டையைக் கீறிவிடுவார்கள். கீறப்பட்ட இடத்திலிருந்து பால் வடியும். அதைப் பாத்திரங்களில் திரட்டுவார்கள். பைன் மரத்தின் பால் மஞ்சள் நிறமுடையது. பிசுபிசுக்கும். இந்தப் பாலில் கர்ப்பூரத் தைலத்துடன் குங்கிலியம், கரித்தார் முதலிய வேறு சில பொருள்களும் கலந்திருக்கும். இந்தப்பாலைக் காய்ச்சுவார்கள். முதலில் கர்ப்பூரத்தைலம் ஆவியாகி வெளியே வரும். இந்த ஆவியைக் குளிர வைத்தால் கர்ப்பூரத் தைலம் கிடைக்கும்.

பண்புகள்[தொகு]

கர்ப்பூரத் தைலம் நிறமற்றது. இதற்கு ஒரு வகை நறுமணம் உண்டு. எண்ணெயைப் போன்றிருக்கும். இது எளிதில் தீப்பற்றி எரியும். எனவே இதைக் கையாள்வதிலும் தேக்கி வைப்பதிலும் மிகவம் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரில் கரையாத தொய்வம், கந்தகம், பாசுவரம் முதலிய பொருள்கள் இத்தைலத்தில் நன்கு கரையும்.

பயன்கள்[தொகு]

உடலில் எங்காவது சுளுக்கோ, வலியோ ஏற்பட்டால் கர்ப்பூரத் தைலத்தைத் தேய்ப்பதுண்டு. சாயங்கள், வண்ணங்கள், மருந்துகள் முதலியவற்றைச் செய்ய கர்ப்பூரத் தைலம் பயன்படுகிறது. இது ஒரு சிறந்த நச்சுக்கொல்லி மருந்து.

மேற்கோள்கள்[தொகு]

  1. "குழந்தைகள் கலைக் களஞ்சியம்", 1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Turpentine
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ப்பூரத்_தைலம்&oldid=3753445" இலிருந்து மீள்விக்கப்பட்டது