கர்ப்பூரத்தைலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கர்ப்பூரத்தைலம்[தொகு]

பைன் மரங்களிருந்து பால் சேகரித்தல்
  கர்ப்பூரத் தைலம்(Turpentine) ஒருவகைப் பைன் மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. 

பெறப்படும் முறை[தொகு]

  தரையிலிருந்து ஓரடி உயரத்தில் பைன் மரத்தின் பட்டையைக் கீறிவிடுவார்கள். கீறப்பட்ட இடத்திலிருந்து பால் வடியும். அதைப் பாத்திரங்களில் சேகரிப்பார்கள். பைன் மரத்தின் பால் மஞ்சள் நிறமுடையது. பிசுபிசுக்கும். இந்தப் பாலில் கர்ப்பூரத் தைலத்துடன் குங்கிலியம், கரித்தார் முதலிய வேறு சில பொருள்களும் கலந்திருக்கும். இந்தப்பாலைக் காய்ச்சுவார்கள். முதலில் கர்ப்பூரத்தைலம் ஆவியாகி வெளியே வரும். இந்த ஆவியைக் குளிர வைத்தால் கர்ப்பூரத் தைலம் கிடைக்கும்.

பண்புகள்[தொகு]

 கர்ப்பூரத் தைலம் நிறமற்றது. இதற்கு ஒரு வகை நறுமணம் உண்டு. எண்ணெயைப் போன்றிருக்கும். இது எளிதில் தீப்பற்றி எரியும். எனவே இதைக் கையாள்வதிலும் சேமித்து வைப்பதிலும் மிகவம் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரில் கரையாத ரப்பர், கந்தகம், பாஸ்வரம் முதலிய பொருள்கள் இத்தைலத்தில் நன்கு கரையும்.

பயன்கள்[தொகு]

  உடலில் எங்காவது சுளுக்கோ, வலியோ ஏற்பட்டால் கர்ப்பூரத் தைலத்தைத் தேய்ப்பதுண்டு. சாயங்கள், வர்ணங்கள், மருந்துகள் முதலியவற்றைத் தயாரிப்பதற்குக் கர்ப்பூரத் தைலம் பயன்படுகிறது. இது ஒரு சிறந்த நச்சுக்கொல்லி மருந்து.

மேற்கோள்கள்[தொகு]

 • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1992, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.

வெளி இணைப்புகள்[தொகு]

 1. http://www.inchem.org/documents/icsc/icsc/eics1063.htm
 2. http://www.cdc.gov/niosh/npg/npgd0648.html
 3. http://www.fao.org/docrep/V6460E/v6460e00.htm
 4. http://www.floridamemory.com/onlineclassroom/zora_hurston/photos/
 5. http://www.hchsonline.org/places/turpentine.html
 6. https://www.theguardian.com/books/2002/jun/01/featuresreviews.guardianreview3
 7. http://cattailmusic.com/Blues/BluesNotes/Turpentine.htm
 8. http://stars.library.ucf.edu/ahistoryofcentralfloridapodcast/24/
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ப்பூரத்தைலம்&oldid=2723983" இருந்து மீள்விக்கப்பட்டது