கர்னிகோட்சவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்னிகோட்சவா அல்லது தீர்க்கதரிசனம் என்பது கர்நாடகாவின் குருபா கவுடா சமூகம் பின்பற்றும் ஒரு பழங்கால பாரம்பரிய நிகழ்வாகும். இது ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள மைலாரா ஜாத்ரேயின் போது ஏற்பாடு செய்யப்படுகின்றது. இது பொதுவாக பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. நியமிக்கப்பட்ட " கோரவா ", பத்து அடி வில்லின் மேல் நின்று, வரும் ஆண்டில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தீர்க்கதரிசனம் கூறி, அந்த உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் போது பக்தர்களால் பிடிக்கப்படுகிறார். மைலாரா லிங்கேஷ்வராவினைப் பின்பற்றி வாழ்கின்ற கோரவா சமூகத்தினர், கம்பளியாலான தலைக்கவசம் மற்றும் பாரம்பரிய மேலங்கி அணிந்து, பாரம்பரியமாக 11 நாட்கள் தீர்க்கதரிசனம் சொல்லும் இறுதி நாள் வரை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்,

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்னிகோட்சவா&oldid=3547974" இருந்து மீள்விக்கப்பட்டது