உள்ளடக்கத்துக்குச் செல்

கர்னாலா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்னாலா கோட்டை
कर्नाळा किल्ला
கர்னாலா, மகாராட்டிரா
கர்னாலா கோட்டை நுழைவாயில்
கர்னாலா கோட்டை is located in மகாராட்டிரம்
கர்னாலா கோட்டை
கர்னாலா கோட்டை
ஆள்கூறுகள் 18°52′54″N 73°07′05″E / 18.88167°N 73.11806°E / 18.88167; 73.11806
வகை மலைக்கோட்டை
இடத் தகவல்
உரிமையாளர் இந்திய அரசு
கட்டுப்படுத்துவது தேவகிரி யாதவர்கள், குசராத்து சுல்தானகம், போர்த்துக்கீசியர், மராத்தியர், கிழக்கிந்திய நிறுவனம்
மக்கள்
அனுமதி
ஆம், காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை
நிலைமை அழிவில்
இட வரலாறு
கட்டிடப்
பொருள்
கல்
உயரம் 439 m (1,440 அடி) ASL

கர்னாலா கோட்டை (புனல் மலை என்றும் அழைக்கப்படுகிறது[1]) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக் கோட்டையாகும். இது பன்வேல் நகரத்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ளது.[1] தற்போது இது கர்னாலா பறவைகள் சரணாலயத்திற்குள் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாகும். கொங்கண் கடற்கரையினை மகாராட்டிராவின் உட்புறத்துடன் (தக்காணப் பீடபூமி) இணைக்கும் போர் கணவாய் இந்தப் பகுதிகளுக்கு இடையிலான முக்கிய வர்த்தக பாதையாகையில்[1] இது முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது.

வரலாறு

[தொகு]

இந்தக் கோட்டை 1400ஆம் ஆண்டுக்கு முன்னர் தேவகிரி யாதவர்கள் மற்றும் துக்ளக் ஆட்சியாளர்களின் கீழ் கட்டப்பட்டிருக்கலாம். கர்னாலா அந்தந்த பேரரசுகளின் வடக்கு கொங்கண் மாவட்டங்களின் தலைநகரமாக இருந்தது.[2] இது பின்னர் குசராத்து சுல்தானகத்தின் கட்டளையின் கீழ் வந்தது. ஆனால் 1540ஆம் ஆண்டில் அகமதுநகரின் நிஜாம் சாவால் கையகப்படுத்தப்பட்டது. குசராத்து சுல்தான்கள் பின்னர் போர்த்துக்கீசியர்களின் கட்டளை அதிகாரியான தோம் பிரான்சிசுகோ டி மெனென்சசின் உதவியை பாசியனில் (நவீன நாள் வசாய்) கோரினர். இவர் தனது 500 வீரர்களை கர்னாலா கோட்டைக்கு அனுப்ப உத்தரவிட்டார். இவர்களால் இக்கோட்டையினைக் கைப்பற்ற முடிந்தது. இந்தக் கோட்டை குசராத்து சுல்தானகத்தின் பொறுப்பில் விடப்பட்டது. ஆனால் போர்த்துகீசியப் படைகளுடன் இருந்தது.[3]

குசராத்து சுல்தான்கள் வசாய்க்குத் தப்பிச் சென்று, கோட்டையை போர்த்துக்கீசியர்களிடம் ஒப்படைத்தனர். கர்னாலாவின் இழப்பு நிசாம் சாவை கோபப்படுத்தியது. இவர் கோட்டையையும் சுற்றியுள்ள கிராமப்புறங்களையும் மீட்டெடுக்க 5,000 வீரர்களை அனுப்பினார்.[3] இந்த முயற்சி தோல்வியடைந்தது. போர்த்துக்கீசியர்கள் தொடர்ந்து கோட்டையைக் கைப்பற்றினர். சாங்லி மற்றும் கர்னாலாவின் கோட்டைகள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்று முடிவு செய்த போர்த்துகீசிய வைசுராய், அவற்றை நிசாம் சாவிடம் ஆண்டுக்கு ரூ. 17,500 (அல்லது 5,000 தங்க பர்தோயசு) செலுத்த ஒப்புக்கொண்டார்.[3][4]

சத்ரபதி சிவாஜி 1670ஆம் ஆண்டில் முகலாயர்களிடமிருந்து இக்கோட்டையினைக் கைப்பற்றினார். இவர் முன்னேறும்போது போர்வீரர்களுக்கான பாதுகாப்பு அரண்களைக் கட்டினார்.[2] 1680இல் இவர் இறந்த பிறகு இக்கோட்டையினை ஔரங்கசீப் கைப்பற்றினார். இதற்குப் பிறகு முகலாயர்கள் சிறிது காலம் ஆக்கிரமித்தனர். அதன் பிறகு 1740ஆம் ஆண்டில் புனேவின் பேசுவாக்களின் எழுச்சியுடன் இக்கோட்டை அவர்களிடம் சென்றது.[5] 1818இல் இங்கிலாந்து கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியை நிறுவும் வரை இது கில்லரின் (கேரிசன் தளபதி அனந்த்ராவ்) தலைமையின் கீழ் இருந்தது.

மலையேற்றம்

[தொகு]

இன்று, கோட்டையின் இடிபாடுகளுக்கிடையேயான நடைப்பயணம் மற்றும் சுற்றுலாவுக்குப் பிரபலமான இடமாகும்.[6] கோட்டைக்குச் செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. இவை:கர்னாலா கோட்டை பாதை மற்றும் இயற்கை பாதை.[7] கர்னாலா கோட்டை பாதை மலையின் அடிவாரத்திலிருந்து 1 மணி நேரம் பயணத்தில் 2.69 கிலோமீட்டர் தூரமுள்ள மலையேற்றப் பாதையாகும்.[8] வனத்துறையால் உருவாக்கப்பட்ட இப்பாதையில் 5 ஓய்வு இடங்கள் உள்ளன. கோட்டையின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள இறுதி படிகள் இரும்பு தண்டுகள் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன. புகையின் வாசனை தேனீக்களை எரிச்சலூட்டுவதால், உச்சியில் உணவு சமைப்பது தவிர்க்கப்படுகிறது. தெற்கே உள்ள பாறையில் வெட்டப்பட்ட நீர்த் தொட்டியிலிருந்து வரும் நீர் குடிக்க ஏற்றது. வன விருந்தினர் மாளிகையில் முதலுதவி வழங்கப்படுகிறது. இயற்கையான பாதை ஒரு குறுகிய (1.2 கிலோமீட்டர்) பாதையுடன் செங்குத்தான அணுகுமுறையினைக் கொண்டது.[9]

பருவமழைக் காலத்தில் மலையேறுவது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகும்.[10]

முக்கிய அம்சங்கள்

[தொகு]
படிகளுடன் கர்னாலா கோட்டை

கர்னாலா கோட்டை உண்மையில் இரண்டு கோட்டைகளைக் கொண்டுள்ளது, ஒன்று உயர்ந்த மட்டத்திலும் மற்றொன்று கீழ் மட்டத்திலும் உள்ளது. உயரமான மேடையின் மையத்தில் 125 அடி உயர பசால்ட் தூண் உள்ளது. இது பாண்டுவின் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோட்டை ஆக்கிரமிக்கப்பட்டபோது இந்தக் கட்டமைப்பு கண்காணிப்புக் கோபுரமாகப் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் இப்போது இது பாழடைந்த நிலையில் உள்ளது. இங்குத் தேனீக்கள் இருப்பதால் ஏறுவது கடினம். இதன் விளைவாகச் சமீப காலங்களில் குறைந்தது ஓர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் சுத்தமான நீரை வழங்கும் ஒரு நீர் தொட்டி உள்ளது. மேலிருந்து பிரபால்காட், மாணிக்கட், காஜி மலாங், சந்தேரி கோட்டை, மாதேரன், சங்கி கோட்டை, துரோணகிரி கோட்டை மற்றும் ராஜ்மாச்சி கோட்டைகளைத் தெளிவாகக் காணலாம்.

இந்தக் கோட்டையில் மராத்தியில் ஒன்று மற்றும் பாரசீக மொழியில் இரண்டு கல்வெட்டுகள் என் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. தேதி இல்லாத மராத்தி கல்வெட்டு உட்புறத்தில் கீழ் வாயிலில் காணப்படுகிறது. இதன் பொருள் புரிந்துகொள்ள முடியாதவை. மேல் வாயிலில் உள்ள பாரசீக எழுத்தில் "சையத் நூருதீன் முகமது கான், ஹிஜ்ரி, 1147 ஏ. எச். (கிபி 1735) " என்று எழுதப்பட்டுள்ளது, இது அநேகமாகக் கோட்டையை முகலாயர்கள் ஆக்கிரமித்த காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இந்தப் பாறையில் வெட்டப்பட்ட கல்வெட்டு சில தீக்குறும்பர்களால் நீண்ட காலத்திற்கு முன்பே அகற்றப்பட்டுள்ளது.

பவானி கோயில்

கர்னாலா கோட்டையின் அடிப்பகுதியில் உள்ள பவானி கோவில்

கோட்டையின் அடிப்பகுதியில் பவானி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஒன்று உள்ளது. இந்தத் தேவி சத்ரபதி சிவாஜிக்கு ஒரு வாளை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இவர் இந்து தேசத்தை நிறுவுவதற்காக ஒரு பரந்த நிலப்பரப்பைக் கைப்பற்றினார்.

கோட்டையின் படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Hunter, William Wilson (1908). Imperial Gazetteer of India. Clarendon Press. pp. 59. பார்க்கப்பட்ட நாள் 2009-02-16. karnala fort.
  2. 2.0 2.1 "Kolaba District Gazetteer". பார்க்கப்பட்ட நாள் 2009-02-16.
  3. 3.0 3.1 3.2 Danvers, Frederick Charles (1894). The Portuguese in India : A.D. 1481-1571. W.H. and Allen. pp. 452–453. பார்க்கப்பட்ட நாள் 2009-02-16.
  4. Gazetteer of the Bombay Presidency. Govt Central Press. 1883. pp. 387. karnala fort.
  5. Shastri Joshi, Venkatesh (1959). Vasudeo Balvant Phadke. D.S. Marathe.
  6. "Karnala Bird Sanctuary - How to go, what is there to see". பார்க்கப்பட்ட நாள் 2014-07-14.
  7. Singh, Bharat (July 18, 2015). "Karnala Fort and Bird sanctuary near Mumbai (Maharashtra) monsoon trek". inditramp. பார்க்கப்பட்ட நாள் July 29, 2020.
  8. inditramp (July 17, 2015). "Karnala Fort Trail". Wikiloc. பார்க்கப்பட்ட நாள் July 29, 2020.
  9. inditramp (July 18, 2015). "Nature Trail to Karnala Fort". Wikiloc. பார்க்கப்பட்ட நாள் July 29, 2020.
  10. "Passions Primitive: Karnala Bird Sanctuary and Fort". passionsprimitive.blogspot.co.uk.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Karnala fort
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்னாலா_கோட்டை&oldid=4081593" இலிருந்து மீள்விக்கப்பட்டது