கர்னாக் கற்கள்
Jump to navigation
Jump to search
கர்னாக் கற்கள் (Carnac stones) என்பது, பிரான்ஸ், பிரிட்டனியிலுள்ள கர்னாக் என்னும் ஊரைச் சுற்றிலும் அசாதாரணமாக அடர்ந்து காணப்படுகின்ற பெருங்கற்காலக் களங்களைக் குறிக்கின்றது. இங்கே, கல்திட்டைகள், குத்துக்கற்கள் போன்ற 3000 க்கும் மேற்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட பெருங்கல் சின்னங்கள் காணப்படுகின்றன. இவையனைத்தும் உள்ளூரில் கிடைக்கும் பாறைகளிலிருந்து உடைத்து எடுக்கப்பட்டு, பிரிட்டனியின் செல்ட்டிக்குகளுக்கு முற்பட்ட மக்களால் அமைக்கப்பட்டவை. இதுவே இத்தகையவற்றுள் உலகிலேயே மிகப்பெரிய தொகுதியாகும்.