கர்நாடகாவில் மதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Circle frame.svg

கர்நாடகாவில் மதங்கள் (2011)[1]

  சைனம் (0.72%)
  Other (0.02%)
  மதமில்லாதவர்கள் (0.27%)

கர்நாடகாவில் மதம் (Religion in Karnataka) நவீன இந்திய மதங்களையும் தத்துவங்களையும் வடிவமைப்பதில் கர்நாடகா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்து மதம்[தொகு]

வேதாந்த இந்து மதத்தின் மூன்று முக்கியமான பள்ளிகளான அத்வைதம், விசிட்டாத்துவைதம், துவைதம் ஆகியவை கர்நாடகாவில் மலர்ந்தன. துவைத மத்துவர் கர்நாடகாவில் பிறந்தவர். அத்வைத ஆதி சங்கரர் தனது நான்கு மடங்களில் முதல் மடத்தை நிறுவ கர்நாடகாவில் உள்ள சிருங்கேரியைத் தேர்ந்தெடுத்தார். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் துறவியாகக் கருதப்படும் விசிட்டாத்வைத இராமானுசர், தமிழ்நாட்டின் சைவ சோழ வம்சத்தின் துன்புறுத்தலுக்குத் தப்பி ஓடி, 1098-1122 வரை கர்நாடகாவில் கழித்தார். இவர் முதலில் தொண்டனூரில் வசித்து வந்தார். பின்னர் மேல்கோட்டைக்குச் சென்றார். அங்கு செல்வநாராயணர் சுவாமி கோயிலும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மடமும் கட்டப்பட்டது. இவர் போசள விட்டுணுவர்தனனால் ஆதரிக்கப்பட்டார்.[2] உடுப்பி, சிருங்கேரி, கோகர்ணம், மேல்கோட்டை ஆகியவை சமசுகிருதம், வேதம் ஆகியவற்றின் கற்றலுக்காக நன்கு அறியப்பட்ட இடங்களாகும்.

கர்நாடகாவில் வீர சைவத்தை வளர்த்த பசவர்

12 ஆம் நூற்றாண்டில், சமூகச் சீர்திருத்தங்கள் வடக்கு கர்நாடகாவில் நிலவும் சமூக மற்றும் சாதி அமைப்பின் கடினத்தன்மைக்கு எதிராக எழுந்தன. இயக்கத்தின் முன்னணி பிரமுகர்களான பசவர், அக்கா மகாதேவி அல்லம பிரபு ஆகியோர் வீர சைவத்தை விளக்கிய அனுபவ மண்டபத்தை நிறுவினர். கர்நாடகாவில் 17% மக்கள் வீர சைவப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

சமணம்[தொகு]

சைன மதம் அதன் மிக முக்கியமான மையமாக கர்நாஇராஷ்டிரகூட வம்சம் மற்றும் மேலை கங்கர்கள்]] காலத்தில் குறைந்தபட்சம் 30% மக்கள் சைனர்களாக இருந்திருக்கலாம்.(Altekar in Kamath 2001, p92)</ref> முதலாம் தீர்த்தங்கரரான ரிசபநாதர் தனது இறுதி நாட்களை கர்நாடகாவில் கழித்ததாகக் கூறப்படுகிறது. சமண தத்துவம், இலக்கியம் ஆகிய இரண்டும் கர்நாடகாவின் மத மற்றும் கலாச்சார நிலப்பரப்புக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளன. இலக்கியம் மற்றும் தத்துவத்தின் மீது சைன தாக்கம் குறிப்பாகத் தெரிகிறது. [3] சரவணபெலகுளா, மூதபித்ரி, கர்கலா ஆகியவை சைன வரலாறு மற்றும் நினைவுச்சின்னங்களுக்கு பெயர் பெற்றவை.

பௌத்தம்[தொகு]

முதலாம் நூற்றாண்டில் கர்நாடகாவின் குல்பர்கா, பனவாசி போன்ற இடங்களில் பௌத்தம் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. 1986 ஆம் ஆண்டு குல்பர்கா மாவட்டத்தில் உள்ள சன்னதியில் ஆணைகளும், பல மௌரிய நினைவுச்சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. கிருஷ்ணா ஆற்றுப் படுகை ஒரு காலத்தில் மகாயான மற்றும் தேரவாத பௌத்த மதங்களின் தாயகமாக இருந்தது என்பதை நிரூபித்துள்ளது.[4] சமீப காலங்களில், பௌத்தம் இங்கு செழித்து வளர்கிறது. மேலும், சோக்சென் மடாலயம், தோன்தெலிங் திபெத்திய அகதிகள் முகாம்களை வீடாக கொண்டுள்ளது.

கலாச்சாரம்[தொகு]

இன்றைய இந்திய மதத்தையும், தத்துவத்தையும் வடிவமைப்பதில் கர்நாடகம் மிக முக்கிய பங்கு வகித்தது. உடுப்பி, சிருங்கேரி, கோகர்ணம், மேல்கோட்டை ஆகியவை சமசுகிருதம், வேதங்கள் ஆகியவற்றை கற்பித்தலில் நன்கு அறியப்பட்ட இடங்களாக இருந்துள்ளது. சரவணபெலகுளா, மூதபித்ரி, கர்கலா ஆகியவை சைன வரலாற்றுக்கும், நினைவுச்சின்னங்களுக்கும் பெயர் பெற்றவை.

துவைதத் தத்துவத்தின் ஆதரவாளரும் துறவியுமான மத்துவர் (கி.பி. 1238-1317) இங்கு பிறந்தார். மேலும், அத்வைதத்தின் ஆதரவாளரான ஆதி சங்கரர் சிருங்கேரியில் ஞானம் கண்டார். சிருங்கேரி அவரால் இந்தியாவில் நிறுவப்பட்ட நான்கு மடங்களில் முதன்மையானது. இராமானுசர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி போசள வம்சத்தின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு வந்து தனது தத்துவத்தை மேல்கோட்ட்டையில் இருந்து பிரசங்கித்தார்.[5] கி.பி 12 ஆம் நூற்றாண்டில், வீரசைவ மதம் வட கர்நாடகத்திலிருந்து தக்காணம் முழுவதும் பரவியது. பசவர், அக்கா மகாதேவி போன்ற அதன் நிறுவனர்கள் பலர் இப்பகுதியில் இருந்து வந்தவர்கள். இங்குதான் சைன மதம் அன்பான வரவேற்பைப் பெற்றது. மேலும், இடைக்காலத்தில் புகழ்பெற்ற வளர்ச்சியை அனுபவித்தது. இங்குதான் தற்போதைய சோக்சென் மடாலயமும் தோண்டெலிங் திபெத்திய அகதிகள் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் திபெத்தியர்கள் கன்னடிக கலாச்சாரத்தில் நன்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கோவில்கள்[தொகு]

பூதநாதர் கோவில் வளாகம், பாதமி

கர்நாடகாவிலிருந்து ஆட்சிக்கு வந்த பேரரசுகளும் சாம்ராஜ்யங்களும் வளமான கட்டிடக் கலைஞர்களாகத் திகழ்ந்தனர். பாதமி சாளுக்கியர்கள் வேசரா கட்டிடக்கலைக்கு வித்திட்டனர். மேலும், நாகரா மற்றும் திராவிடக் கட்டிடக்கலை கருத்துகளை அடிக்கடி கலந்து பல எண்ணற்ற பாணிகளை பரிசோதித்தனர். இந்த காலகட்டம் இந்து பாறைக் கட்டிடக்கலையின் தொடக்கமாகும். தனித்தனியாகவும்பட்டடக்கல், ஐஹோல் பாதமியில் காணப்படும் குடைவரைக் கோயில்களிலுள்ள பழமொழிகளிலும், பல எடுத்துக்காட்டுகள் உள்ளன - ( பாதாமி குடைவரைக் கோவில்கள் ). அவர்களின் வழித்தோன்றல்களான இராஷ்டிரகூடர்கள் திராவிடக் கட்டிடக் கலைக் கருத்துகளை மேலும் ஆதரிக்கும் முக்கியக் கோவில்களை உருவாக்கினார். கர்நாடகாவில் உள்ள அவர்களின் பெரும்பாலான கோயில்கள் வட கர்நாடக மாவட்டங்களில் சிதறிக்கிடக்கின்றன. தலக்காட்டின் கங்க வம்சத்தினர் சரவணபெலகுளாவிலுள்ள கோமதேசுவரரின் ஒற்றைக்கல் சிலை உட்பட பல சமண நினைவுச்சின்னங்களை கட்டியுள்ளனர். மேலைச் சாளுக்கியர்கள் தங்களுக்கென ஒரு தனி பாணியைப் பயன்படுத்தினர். இது சாளுக்கிய - இராஷ்டிரகூடர், போசளர் பாணிகளுக்கு இடையே ஒரு பாலத்தை குறிக்கிறது. கதக் மாவட்டத்தின் மத்திய மாவட்டங்களில் ( இலக்குண்டி, தம்பால், சூதி, இலட்சுமேசுவரம், கதக் - பெட்டகேரி ), கொப்பள் மாவட்டம், ( இட்டகி மகாதேவர் கோயில், குக்கனூர் ), ஆவேரி மாவட்டம் ( கலகநாதர் கோயில், சௌதையதானபுரம், ஆவேரி, ஹரிகள்ளி, ஹங்கல் ) , தார்வாட் மாவட்டம் ( அன்னிகேரி, குந்தோல், தாம்பூர், சந்திரமௌலீசுவரர் கோவில், உனக்கல் ஹூப்ளி) போன்ற இடங்களில் அவர்களின் பாணியின் சிறந்த கோயில்கள் உள்ளன. போசளர்களின் ஆட்சியின் போதுதான் கோயில் கட்டிடக்கலை அதன் சகாப்தத்தை எட்டியது. மேலும், அதன் பல தனித்துவமான அம்சங்களின் காரணமாக (ஹென்றி பெர்குசன், பெர்சி பிரவுன்) என அழைக்கப்படும் ஒரு சுயாதீன பாணியாக அங்கீகாரம் பெற்றது. பின்னர் விஜயநகரப் பேரரசு இந்த பல்வேறு பாணிகளை ஒருங்கிணைத்து, விஜயநகர பாணி என்று ஒரு தனித்துவமான கலவையை உருவாக்கியது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக அம்பியில் உள்ள நினைவுச்சின்னங்களின் பரந்த திறந்தவெளி அரங்கில் உள்ளன.

இசுலாமும் கிறிஸ்தவமும்[தொகு]

10ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் ஆரம்பகால இருப்பைக் கொண்டிருந்த இசுலாம், கர்நாடகாவின் சில பகுதிகளை ஆண்ட பாமினி சுல்தானகம், பிஜப்பூர் சுல்தானகம் ஆகியோரின் வருகையுடன் கர்நாடகாவில் காலூன்றியது.[6]

1545இல் போர்த்துகீசியம் புனித பிரான்சிஸ் சவேரியரின் வருகையுடன் 16ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துவம் கர்நாடகத்தை அடைந்தது.[7]

இன்று, இசுலாமும் கிறிஸ்துவமும் கர்நாடகாவில் கணிசமான பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கின்றன. மேலும், மாநிலத்தின் கலாச்சார அண்டவியல் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன.

இசுலாம்[தொகு]

இப்ராஹிம் ரோசா நினைவுச்சின்னங்கள், 17 ஆம் நூற்றாண்டு.

7ஆம் நூற்றாண்டில் அரேபிய வணிகர்களுடன் மசாலா வர்த்தகத்தின் மூலம் இசுலாம் கர்நாடகாவிற்கும், கேரளாவிற்கும் பரவியது. முஸ்லிம்கள் காபி மற்றும் காகிதத் தொழிலை உள்ளூர் பொருளாதாரத்திற்கு அறிமுகப்படுத்தினர். [8] [9] 12ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து, பல்வேறு இசுலாமியப் படைகள் பிதாரின் பாமினி சுல்தானகம் (1347-1510) , பீஜாப்பூர் சுல்தானகத்தின் அடில்ஷாஹி வம்சம் (1490-1686) போன்ற சுல்தான்கள் இந்த பகுதியில் தங்கள வம்சத்தை நிறுவினர். இந்த நிலம் 17ஆம் நூற்றாண்டில் ஔரங்கசீப்பின் ஆட்சியில் முகலாய ஆட்சியின் கீழ் வந்தது. முகலாய ஆட்சியின் சிதைவுடன், ஐதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் மைசூர் பகுதியில் தங்கள் ஆட்சியை நிறுவினர். அவர்கள் அப்பகுதியில் பிரிட்டிசார் ஆட்சியை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் மற்ற இராச்சியங்களின் போதுமான ஒத்துழைப்பு இல்லாமல் தோற்கடிக்கப்பட்டனர். 1799இல் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டாலும், போரில் ஆங்கிலேயர்களை தோற்கடித்த ஒரே இந்தியத் தலைவர் திப்பு சுல்தான் மட்டுமே. [10] இது அவரை நவீன காலத்தில் மக்கள் மத்தியில் ஒரு குறியீட்டின் தலைவராக்கியது. கூடுதலாக, ஐதராபாத் நிசாம்கள் வடகிழக்கு கர்நாடகாவின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர். 1956 மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த நிலம் கர்நாடகாவின் ஒரு பகுதியாக மாறியது.

கர்நாடகாவின் மக்கள் தொகையில் சுமார் 12.91% முஸ்லிம்களாக உள்ளனர்.[11] கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் காணப்பட்டாலும், முஸ்லீம்கள் வலுவான இருப்பைக் கொண்டுள்ளனர்: [12] [13]

1. குல்பர்கா, பீதர், பிஜாப்பூர், ராய்ச்சூர் தார்வாட் போன்ற வடக்கு கர்நாடகா (குறிப்பாக முன்னர் ஐதராபாத் நிசாமால் ஆளப்பட்ட பகுதிகள்)

2. கேரளாவை ஒட்டிய மாவட்டங்கள்.

3. பெங்களூர், மைசூர் மங்களூர் நகரங்கள். [13]

மறுபுறம், மத்திய கர்நாடகாவில் முஸ்லிம்களின் விகிதம் குறைவாக உள்ளது.[14] கர்நாடகாவில் முஸ்லிம்களின் முக்கிய பேச்சு மொழி டக்கினி என்று அழைக்கப்படும் ஒரு பேச்சுவழக்கு ஆகும். இது உருதுடன் மேலும் சிலவற்றைக் கொண்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் கன்னடம், தெலுங்கு, சிந்தி ஆகிய மொழிகளையும் பேசுகிறார்கள் . கர்நாடகாவில் முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. வட இந்திய மாநிலங்களை விட கர்நாடகாவில் (தென்னிந்தியாவின் மற்ற பகுதிகளைப் போலவே) கல்வி மற்றும் செல்வத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் மிதமான உயர் மட்ட முன்னேற்றத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு வட இந்திய சகாக்களை விட அதிக வாய்ப்புகள் உள்ளன. [15]

கிறிஸ்தவம்[தொகு]

கி.பி. 1500-1600க்கும் இடையில் போர்த்துகீசியர்களுடன் கிறிஸ்தவம் கர்நாடகாவிற்கு வந்தது. பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையில் அதாவது கார்வாரிலிருந்து மங்களூர் வரை காணப்படுகின்றனர் .

கர்நாடகாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது மங்களூரில் ரோமன் கத்தோலிக்கர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் 17-18 ஆம் நூற்றாண்டுகளில் கோவாவிலிருந்து குடியேறிய கோவா கத்தோலிக்கர்கள் மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களிடமிருந்து வந்தவர்கள். கர்நாடகாவில் சில புராட்டஸ்டன்ட்களும் காணப்படுகின்றனர். அவர்களில் பலர் உள்ளூர் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

பெங்களூரு, புனித அன்னை மரியா பெருங்கோவில் கர்நாடகாவில் உள்ள ஒரே பெருங்கோவிலாகும். மேலும் பெங்களூரில் உள்ள பழமையான தேவாலயமுமாகும்.

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. Census 2011 data
 2. (Kamath 2001), p150-152
 3. The earliest cultivators of கன்னட இலக்கியம் (Narasimhacrhaya 1988, p17
 4. Kamat, Jyotsna Dr. "Buddhist System of Education". Education in Karnataka through the ages. Kamat's Potpourri. 2007-06-10 அன்று பார்க்கப்பட்டது.
 5. Fearing persecution by the Cholas who were staunch Shaiva, Ramanujacharya came to Karnataka in 1098 and lived there till 1122 C.E. He first lived in Tondanur and then moved to Melukote where the Cheluvanarayana temple and a well organised Matha were built. Hoysala Vishnuvardhana became his devotee and converted from Jainism to Hinduism. This helped popularise his Vishva adviata philosophy in the region, A Concise History of Karnataka, Dr. S.U. Kamath, A History of South India, From Prehistoric times to fall of Vijayanagar, by Prof. K.A. Nilakanta Sastri
 6. Sastri (1955), p396
 7. Sastri (1955), p398
 8. Encyclopaedia of India: Karnataka, Pran Nath Chopra (1992)
 9. Muslim Wedding South India
 10. Tipu Sultan Profile
 11. Indian Census 2001 - Religion பரணிடப்பட்டது 2007-03-12 at the வந்தவழி இயந்திரம்
 12. A. R. Fatihi. "Urdu in Karnataka". Language in India, Volume 2: 2002-12-09. M. S. Thirumalai, Managing Editor, Language in India. 2007-06-29 அன்று பார்க்கப்பட்டது.
 13. 13.0 13.1 Map of Muslims in India[தொடர்பிழந்த இணைப்பு]
 14. A. R. Fatihi. "Urdu in Karnataka". Language in India, Volume 2: 2002-12-09. M. S. Thirumalai, Managing Editor, Language in India. 2007-06-29 அன்று பார்க்கப்பட்டது.A. R. Fatihi. "Urdu in Karnataka". Language in India, Volume 2: 2002-12-09. M. S. Thirumalai, Managing Editor, Language in India. Retrieved 29 June 2007.
 15. Sachar Committee Report பரணிடப்பட்டது 2010-07-04 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடகாவில்_மதம்&oldid=3365641" இருந்து மீள்விக்கப்பட்டது