கர்நாடகாவின் நாட்டுப்புறக் கலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாட்டுப்புற நடனம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகளை கர்நாடகா கொண்டுள்ளது.

கர்நாடகாவின் சடங்கு நடனங்கள் குனித்தா என்று அழைக்கப்படுகின்றன. அத்தகைய ஒரு நடனங்களில் ஒன்று டோலு குனித்தா, அலங்கரிக்கப்பட்ட முரசின் தாளத் துடிப்பு, பாடல் இவற்றுடன் நடன வடிவம் சேர்ந்த புகழ்பெற்ற நடனம் டோலு குனித்தா ஆகும். இந்த நடனம் முதன்மையாக மேய்ப்பன் அல்லது குருபா எனப்படும் குரும்பர் இனத்தைச் சேர்ந்த ஆண்களால் நிகழ்த்தப்படுகிறது. டோலு குனித்தா தீவிரமான தாளத்துடிப்பு, விரைவான இயக்கங்கள் மற்றும் ஒத்திசைக்கப்பட்ட குழு அமைப்புகளால் வகைப்படுத்தப்படுகிறது.

குடகு[தொகு]

கொடாக்கள் ஒரு தனித்துவமான குழுவாகும். அவர்கள், சுற்றியுள்ள மக்களிடமிருந்து பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் மதத்தில் வேறுபடுகிறார்கள், மேலும் வருடாந்திர அறுவடை நடனம் செய்கிறார்கள். அலங்கார கத்திகளுடன் பாரம்பரிய கோடவா உடையில் அணிந்த ஆண்கள், பின்னணி இசைக்கு இந்த மெதுவான நடனத்தை செய்கிறார்கள். நடனம் வெவ்வேறு வகைகளைக் கொண்டுள்ளது:

கர்நாடகாவில் தற்கால நிகழ்த்துக் கலை கலாச்சாரத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த நினாசம், ரங்க சங்கரா, ரங்காயணம் ஆகிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து நடத்தப்படும் ஹட்டாரி நடனமும் குப்பி வீரண்ணா நாடகக் குழுவால் நிகழ்த்தப்படும் ’போலக் ஆட்டா’ எனப்படும் குடகு நடனக்கலையும் இந்தியாவில் மிகத் துடிப்பான நடனங்கள் ஆகும்.

போலக் ஆட்டா

ஒரு திறந்தவெளியில் எண்ணெய் விளக்குக்கு பின்னால் கொதவர் இனஆண்கள் போலக் ஆட்டா எனப்படும் இந்த நடனத்தை நிகழ்த்துகின்றனர். இந்த நடனத்தை நிகழ்த்தும்போது ஆண்கள் ஒரு கையில் சாவாரி (எருமை மயிர்) மற்றும் மற்றொரு கையில் கொதவக் குறுவாள்( ஓடி-கத்தி ) ஆகியவை வைத்திருக்கிறார்கள். இந்த நடனத்தில் பல்வேறு பிராந்திய வகைகள் உள்ளன. சில வகைகளில் கலைஞர்கள் குறுவாளின்றி வெறும் சாவரியுடன் நடனமாடுகிறார்கள். சில நேரஙக்ளில் ஒடி கத்தி, சவாரி இரண்டும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறி இரண்டும் பயன்படுத்தி ஆடப்படும் நடனம் கத்தியாட்டா என அறியப்படுகிறது. துடி எனப்படும் உடுக்கை வடிவ இசைக்கருவி, சீரான தாளத்தை வழங்குகிறது.

உம்மட்டி ஆட்டா

கொதவர் இனப் பெண்கள் நிகழ்த்தும் நடனவடிவம் உம்மட்டி ஆட்டம் ஆகும். பாரம்பரிய கொதவர் ஆடைகளை நகைகளுடன் அணிந்துகொண்டு, நெற்றிகளை குங்குமத்தால் அலங்கரித்து வட்டமாக நடனமிடுவார்கள். அவர்களின் கையில் உள்ள பித்தளை ஜால்ராக்கள் கொண்டு தாளமிட்டபடியே அந்த இசைக்கேற்ப நடனமாடுவார்கள். கொதவர்கள் வழிபடும் காவேரி தாயை (அன்னை காவேரி) பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக ஒரு பெண் முழு பானையை வைத்க்கொண்டு மையத்தில் நிற்பாள்.

கொம்பாட்டா

போலக் ஆட்டா மற்றும் உம்மட்டி ஆட்டா ஆகியவை கொண்டாட்டம் மற்றும் திருவிழாக் காலங்களில் ஆடப்படும் என்றாலும், கொம்பாட்டா ஒரு மத நடனமாகும். இது பாரம்பரியமாக கோவில்களில் நிகழ்த்தப்படுகிறது, ஆனால் பிற இடங்களிலும் நிகழ்த்தப்படலாம். கொதவர் இனஆண்கள் மூலமாகச் கொம்பாட்டா நிகழ்த்தப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் மான்கொம்புகள் கொதவ தொன்மக் கதைகளில் கிருஷ்ணமிருகம் என அழைக்கப்படும் புள்ளிமான்களைக் குறிக்கின்றன. இந்த நடனம் காற்றுக் கருவிகள் மற்றும் தாளங்களில் இசைக்கப்படும் தாள இசைக்கேற்ப இசைக்கப்படுகிறது, மேலும் போரில் கொதவர்கள் பயன்படுத்திய நுட்பங்களைக் குறிக்கும் தற்காப்பு இயக்கங்களும் இதில் அடங்கும்.

மைசூர் பகுதி[தொகு]

டோலு குனித்தா[தொகு]

Colourfully-dressed women dancing
பெண்களால் நிகழ்ட்தப்படும்டோலு குனிதா பெண்கள் நடனமாடுகிறார்கள்.

இது டோல்லு எனப்படும் ஒரு இசைக்கருவி கொண்டுநிகழ்த்தப்படும் ஒரு குழு நடனமாகும். மற்றும் குருபா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்தினர். இந்த குழுவில் 16 நடனக் கலைஞர்கள் இருப்பார்கள், ஒவ்வொருவரும் தாளக் கருவி அணிந்து நடனமாடும்போது வெவ்வேறு தாளங்களை வாசிப்பார்கள். மையத்தில் ஜால்ராக்கள் கொண்டு ஒரு தலைவரால்தாளத் துடிப்பு இயக்கப்படுகிறது. மெதுவான மற்றும் வேகமான தாளங்கள் மாறி மாறி இசைக்கப்படும் பொழுது நடனக்குழு பல்வேறு குழு மாறுபட்ட நடனவடிவத்தை நிகழ்த்துவார்கள். ஆண்களால் நிகழ்த்தப்பட்டாலும் பெண்களாலும் டோலு குனித்தா நிகழ்த்தப்படுகிறது. இதற்கான ஆடைகள் எளிமையானவை; உடலின் மேல் பகுதி வழக்கமாக வெறுமனே விடப்படும், அதே சமயம் ஒரு கருப்பு தாள் வேட்டியின் மேல் உடலில் கட்டப்படும். வில் இருந்தனர், 1987 இல் கே.எஸ் ஹரிதாஸ் பட் தலைமையில் ஒரு குழுவினர் சோவியத் ஒன்றியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். மாஸ்கோ, லெனின்கிராட், வைப்ராக், ஆர்சன்கேல்ச்க், ஸ்கோவ்,, மர்மேந்ஸ்க், தாஷ்கண்ட் மற்றும் நோவோகிராட் ஆகிய இடங்களில் இவர்கள் நடனநிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள்.

பீசு சம்சலே மற்றும் கம்சலே நிருத்யா[தொகு]

மைசூர், நஞ்சநகுடு, கொல்லேகலா மற்றும் பெங்களூர் பகுதிகளில் கிராமப்புற ஆண்கள் நிகழ்த்தும் குழு நடனம் இது. இது கம்சாலே (ஜால்ரா) எனப்படும் இசைக்கருவி கொண்டு நடனக் கலைஞர்களால் இசைக்கப்படுவதால் இந்த நடனத்திற்கு கம்சாலே என்று பெயரிடப்பட்டது,. கம்சலே ஒரு கையில் ஒரு ஜால்ரா மற்றும் மறுபுறத்தில் வெண்கல வட்டு, இரண்டையும் தட்டுவதால் ஒரு தாள இசையை உருவாக்குகிறது.

சோமன குனித்தா[தொகு]

சோமனா குனித்தா (முகமூடிநடனம்) எனப்படும் நடனம் தெற்கு கர்நாடகாவில் புகழ்பெற்ற ஆவி வழிபாட்டின் ஒரு கொண்டாட்ட வடிவமாகும், இது முதன்மையாக கங்கேமாதா சமூகத்தால் அன்னை தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கிராம தேவதை ஆலயங்களில் நிகழ்த்தப்படுகிறது. நடனம் பல்வேறு வண்ணங்களில் வரையப்பட்ட விரிவான முகமூடிகளால் ( சோமாக்கள் ) வகைப்படுத்தப்படுகிறது, ஒவ்வொரு முகமூடியின் நிறமும் கடவுளின் தன்மையைக் குறிக்கிறது. ஒரு நல்ல தெய்வம் ஒரு சிவப்பு முகமூடியால் குறிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒரு மஞ்சள் அல்லது கருப்பு முகமூடி எதிர்மாறாக இருப்பதைக் குறிக்கிறது. பல வகையான முகமூடிகள் உள்ளன, அவை பிராந்தியத்திற்கு ஏற்ப வேறுபடுகின்றன.

சோமன குனித்தா சிறு தெய்வ வழிபாடு தொடர்புடைய ஒரு சம்பிரதாய நடனம் ஆகும். இந்நடனம் முதன்மையாக உகாதிக்குப் பிறகு மகா சிவராத்திரியில் பருவமழை தோன்றுவதற்கு முன்பாகவே கொண்டாடப்படுகிறது இது பழைய மைசூர் பிராந்தியத்தில், ஹசன், தும்கூர், பெங்களூர், மண்டியா மற்றும் சித்ரதுர்கா போன்ற மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற நடன வடிவமாகும்.

சுகி குனித்தா[தொகு]

சுகி குனித்தா (அறுவடை நடனம்) அறுவடை நேரத்தில் பெரும்பாலும் விவசாய சமூகத்தினரால் செய்யப்படுகிறது. செதுக்கப்பட்ட பறவைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகான உடைகள் மற்றும் மரத்தாலான தலைக்கவசங்கள் அணிந்து கலைஞர்கள் தாள இசைக்கு ஏற்ப குச்சிகள் மற்றும் மயிலிறகுகளுடன் நடனமாடுகிறார்கள். அவர்கள் சில நேரங்களில், தங்கள் சொந்த நடைகளால் நடனத்தை மேம்படுத்துகிறார்கள். [1]

வடக்கு கர்நாடகா[தொகு]

கர்நாடகாவின் பாரம்பரிய மர பொம்மலாட்டம்.

ஜக்காலிகே குனித்தா[தொகு]

உகாதி மற்றும் ஹோலி பண்டிகைக் கொண்டாட்டங்களின் பொழுது ஹூப்பள்ளி தார்வார்டு பகுதியைச் சேர்ந்த பகுதிகளில் குறிப்பாக பியாஹத்தி கிராமத்தில் நிகழ்த்தப்படும் ஒரு நாட்டுப்புற கலை வடிவமாகும். ஜக்காலிகே என்பது எருமைத்தோலால் மூடப்பட்ட ஒரு காளை வண்டி சக்கரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு தாள வாத்தியமாகும். கிராமவாசிகள் பெரிய கருவிகளை உருட்டியபடி ஊர்வலமாக அணிவகுத்துச் செல்வார்கள். கனிஹாலிகி என்று அழைக்கப்படும் மிகச் சிறிய தாளக் கருவியை இந்த நடன இயக்குனர் இசைத்துக் கொண்டே முன் செல்வார், இது களிமண்ணால் ஆனது. கன்றின் தோலால் மூடப்பட்டிருக்கும். இந்த நடனம் பொதுவாக சுமார் 15 நபர்களை உள்ளடக்கிய ஒரு குழு நடனம் ஆகும்.

கரடிமாஜால்[தொகு]

இது வடக்கு கர்நாடகாவில் பிரபலமான குழு நாட்டுப்புற இசை, இது சந்தர்ப்பங்களிலும் ஊர்வலங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. கரடி என்பது நடனக்குழு பயன்படுத்தும் தாள இசைக்கருவியாகும். இது ஒரு பனையோலை அளவிலான ஜால்ரா இசைக் கருவி ஆகும், இது உலோக ஒலிகளை உருவாக்குகிறது, மேலும் இணைந்து ஒலிக்கப்படும் செனாய் மெல்லிசையை உருவாக்குகிறது.

கிருஷ்ண பாரிஜாதா[தொகு]

கிருஷ்ண பாரிஜாதா என்பது வடக்கு கர்நாடகாவில் பிரபலமான நிகழ்த்துக்கலை ஆகும். இது மகாபாரதத்தின் கதைகள் அல்லது காட்சிகளை சித்தரிக்கும் யக்சகானம் மற்றும் பயலாட்டா ஆகியவற்றின் கலவையாகும்

லாவணி[தொகு]

மகாராஷ்டிராவின் இந்த நாட்டுப்புற நடனம் வடிவமானது கர்நாடகாவில் சில பகுதிகளில் நிகழ்த்தப்படுகிறது.

குறிப்புக்கள்[தொகு]

  1. "The Stage is Karnataka".