கர்ணன் ஏரி
கர்ணன் ஏரி Karna Lake | |
---|---|
அமைவிடம் | கர்னால், அரியானா |
ஆள்கூறுகள் | 29°44.632′N 76°58.574′E / 29.743867°N 76.976233°E |
வடிநில நாடுகள் | ![]() |
கர்ணன் ஏரி (Karna Lake); இது இந்திய அரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது, சண்டிகர் மற்றும் டெல்லி என இரு நகரங்களுக்கிடையே 125 கி. மீ தூரத்தில் அமைந்துள்ள, இது பிரபலமான பெரும் தலைநெடுஞ்சாலையின் இரண்டு நகரங்களுக்கிடையே பயணம் செய்யும் போது நடுவழியில் நிலை நிறுத்தப்படுகிறது.[1]
இந்திய [[வரலாறு|வரலாற்றின் மகாபாரதப் போரில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த கர்ணன், இந்த ஏரியை குளிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டதாக நாட்டுப்புற வரலாறு கூறுகிறது. மேலும் கர்ணனின் விரோதி அருச்சுனனின் கடவுளான இந்திரனுக்கு, தனது பாதுகாப்பு கவசத்தை கொடுத்தது இந்த இடத்தில்தான் என்று கருதப்படுகிறது. கர்ணால் நகரம், அதன் பெயர் கர்ணா - தால் என்பதிலிருந்து பெறப்பட்டதாகவும், ஆதலால் இது கர்ணா ஏரி என்று பொருள்படுகிறது. கர்னால் நகரத்தை உள்ளூர் மொழியில் கர்ணன் என்றும் அழைக்கப்படுகிறது.[2]