உள்ளடக்கத்துக்குச் செல்

கர்கோசா செரி நெகாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்கோசா செரி நெகாரா
Carcosa Seri Negara
கர்கோசா செரி நெகாரா (2026)
Map
முந்தைய பெயர்(கள்)அரசர் மாளிகை
பொதுவான தகவல்கள்
வகைதங்கும் விடுதி
கட்டிடக்கலை பாணிவிக்டோரிய கோதிக் & துடோர் மறுமலர்ச்சி
இடம்கெபுன் பூங்கா சாலை, கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூற்று3°08′43″N 101°40′49″E / 3.14528°N 101.68028°E / 3.14528; 101.68028
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)ஆர்தர் பெனிசன் அப்பாக்

கர்கோசா செரி நெகாரா (ஆங்கிலம்; மலாய்: Carcosa Seri Negara) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில், பெர்தானா தாவரவியல் பூங்காவிற்குள் இரண்டு குன்றுகளுக்கு இடையில் அமைந்துள்ள அரசர் மாளிகை ஆகும். அதற்கு முன்னர் இந்த மாளிகை மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர்களுக்கான அதிகாரப்பூர்வ மாளிகையாகவும்; விருந்தினர் மாளிகையாகவும் செயல்பட்டது.[1] இது தற்போது மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமானது.

கர்கோசா செரி நெகாரா எனும் பெயர், அந்த வளாகத்தில் அமைந்துள்ள குடிமைப்பட்ட கால இரண்டு மாளிகைகளின் கூட்டுப் பெயர்ச் சொல்லாகும்: கர்கோசா எனப் பெயரிடப்பட்ட மாளிகை 1898-இல் கட்டி முடிக்கப்பட்டது; மற்றும் தற்போது செரி நெகாரா எனப் பெயரிடப்பட்ட விருந்தினர் மாளிகை 1913-இல் கட்டி முடிக்கப்பட்டது. மலேசிய விடுதலை இயக்கத்தில் இந்தக் கட்டடங்கள் முக்கியப் பங்கு வகித்தன. இங்கு மலேசிய விடுதலை தொடர்பாக பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. 1957-இல் மலாயா விடுதலை பெற்றதிலிருந்து, மலாயாவிற்கு வருகை தரும் முக்கிய அரசு விருந்தினர்களுக்கான இல்லங்களாகவும் (1957–1989), ஒரு சொகுசு விடுதியாகவும் (1989–2015) பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் 2017 முதல், இது ஓர் அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகிறது.

வடிவமைப்பு

[தொகு]

கர்கோசா மாளிகை, அப்போதைய மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தலைமை ஆளுநர் சர் பிராங்க் சுவெட்டன்காம் அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாக 1896–1897 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதை ஆர்தர் பெனிசன் அப்பாக் (Arthur Benison Hubback) என்பவர் வடிவமைத்தார்.[2]

செரி நெகாரா (மலாய் மொழியில் "நாட்டின் பெருமை"), 1913-இல் நீரிணைக் குடியேற்றங்களின் ஆளுநரின் அதிகாரப்பூர்வ விருந்தினர் மாளிகையாகத் திறக்கப்பட்டபோது முதலில் ஆளுநர் இல்லம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் அது அரசர் மாளிகை என்று அறியப்பட்டது.[3]

வரலாறு

[தொகு]

கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் பிராங்க் சுவெட்டன்காம் கர்கோசாவிற்கு குடிபெயர்ந்தார். இரண்டாம் உலகப் போரின் போது, ​​மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு நடந்த போது அரச சப்பானிய இராணுவத்தின் தலைமையகம் இந்த கர்கோசா செரி நெகாராவில் தான் இருந்தது.[2]

1955 மற்றும் 1957-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மலேசிய அரசியலமைப்பு இதே செரி நெகாராவில் தான் உருவாக்கப்பட்டது.[2] மலாயா கூட்டமைப்பு ஒப்பந்தம் 1957 ஆகத்து 8-இல், அரசர் மாளிகையில் கையெழுத்தானது.[4] அதன் பிறகு, ஆகத்து 31, 1957 அன்று பிரித்தானிய உயர் ஆணையரால் செரி கர்கோசா மாளிகை, மலாயா அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1986-ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் உட்பட, வருகை தந்த பல பிரமுகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், செரி கர்கோசா மாளிகையில் ஒரு பகுதி விருந்தினர் அரண்மனை என புதுப்பிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cheh, Samantha (29 October 2017). "Asian Heritage Museum to open at Carcosa Seri Negara, Kuala Lumpur". Luxuo. Art Republik. Archived from the original on 1 October 2018. Retrieved 1 October 2018.
  2. 1 2 3 4 Tee, Kenneth (31 August 2018). "Carcosa Seri Negara: Birthplace of Malaysia's Constitution to be reborn as beacon of peace". Malay Mail இம் மூலத்தில் இருந்து 2 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181002020156/https://www.malaymail.com/s/1668119/carcosa-seri-negara-birthplace-of-malaysias-constitution-to-be-reborn-as-be. பார்த்த நாள்: 1 October 2018.
  3. Warren, William; Gocher, Jill (photographer) (2007). "Carcosa Seri Negara". Asia's Legendary Hotels: The Romance of Travel. Singapore: Periplus Editions (HK) Ltd. p. 164. ISBN 978-1-4629-0674-1. Retrieved 1 October 2018.
  4. Wong, June H.L. (6 September 2017). "Breathing new life into Carcosa". The Star இம் மூலத்தில் இருந்து 2 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181002064510/https://www.thestar.com.my/opinion/columnists/so-aunty-so-what/2017/09/06/breathing-new-life-into-carcosa-an-exhibition-on-merdeka-is-the-first-step-in-reinventing-the-role-o/. பார்த்த நாள்: 1 October 2018.

மேலும் காண்க

[தொகு]

நூல்கள்

[தொகு]
1.^ Journal of Malaysian Branch of the Royal Asiatic Society, June 1997, Dr. A. Ghafar Ahmad
2.^ William Warren, Jill Gocher (2007). Asia's legendary hotels: the romance of travel. Singapore: Periplus Editions. ISBN 978-0-7946-0174-4.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்கோசா_செரி_நெகாரா&oldid=4586386" இலிருந்து மீள்விக்கப்பட்டது