கரோலின் (அ) கரோலின் சகாப்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரோலின் அல்லது கரோலின் சகாப்தம் என்பது ஆங்கில மற்றும் ஸ்காட்டிஷ் வரலாற்றின் ஸ்டார்ட் காலகட்டம் (1603 - 1714) சார்லஸ்ஐன் ஆட்சிக்காலத்தைக் குறிக்கும். கரோலஸ் என்ற லத்தீன் மொழிச்சொல் சார்லஸ் என்ற பெயரைக் குறிக்கும். கரோலின்சகாப்தம் ஜேக்கோபியன் சகாப்தத்தைத் தொடர்ந்து ஜேம்ஸ்ஐன் (சார்லஸின்தந்தை) ஆட்சிக்காலத்தில் (1602 - 1625) இருந்துதுவங்குகிறது. இதைத் தொடர்ந்த நிகழ்வுகளாவன ஆங்கில உள்நாட்டுப் போர் (1642 - 1651) மற்றும் ஆங்கில இன்டரெக்னம் (1642 - 1660).

கரோலின் சகாப்தத்தின் சிறப்பம்சங்கள்[தொகு]

 கரோலின் சகாப்தத்தில் அரசர் மற்றும் அவருடைய ஆதாரவாளர்களான ராயலிஸ்ட்கட்சிக்கும், சார்லஸின் ஆட்சியின் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்த ப்யூரிட்டன் எனப்படும் அமைப்புக்கும் இடையேயான சமய அரசியல் மற்றும் சமுதாயப் போராட்டங்கள் ஆதிக்கம் செலுத்தின. ஐரோப்பியக் கண்டத்தில் முப்பது ஆண்டுகாலம் நீடித்த இரத்தம் தோய்த்த போராட்டங்களைப் போல அன்றி பிரிட்டனின் கரோலின் காலம் ஒரு முரண்பட்ட அமைதியை வெளிப்படுத்தியது. சார்லஸ் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் அரசர் மற்றும் ப்யூரிட்டன் இடையிலான போராட்டம் மேலும் மோசமானது.

இந்தப் போராட்டங்களின் தாக்கத்தால் முன்னேற்றங்கள் இன்றி முந்தைய கண்டுபிடிப்புகளே தொடர்ச்சிகளே காணப்பட்டன. அதில் சில தொடர்ச்சிகளே காணப்பட்டன. அதில் சில தொடர்ச்சிகள் எதிர்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்கின. சார்லஸின் ஆட்சிக்காலத்தில் வடஅமெரிக்காவில் பிரிட்டனின்காலனி ஆதிக்கம் பெருமளவு வளர்ச்சி அடைந்தது. மேரிலேண்ட் (1634), கனெக்டிகட் (1635) ரோட்ஐலேன்ட் (1636) போன்ற புதியகாலனிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். வர்ஜீனியா, மாசசூசெட்ஸ் மற்றும் நியூஃபவுண்ட்லேண்டில் முன்னர் நிறுவப்பட்ட காலனிகளின் முன்னேற்றமும் தொடர்ந்தது. மசாசுசெட்ஸில் 1637 ல் நடந்த பெக்வாட்போர் புதிய இங்கிலாந்து குடியேற்றத்தினருக்கும், பூர்வீக அமெரிக்க மக்களுக்கும் இடையே நடந்த முதன்மையான ஆயுதமோதலாக இருந்தது. 

இலக்கியம்[தொகு]

இலக்கியத்தில் குறிப்பாக நாடகத்தில் கரோலின் காலத்தில் அதற்கு முந்தைய காலகட்டத்தின் நலிந்த தொடர்ச்சிகளே காணப்பட்டன. கரோலின் காலத்து நாடக அரங்குகள் வில்லியம்ஷேக்ஸ்பியர் மற்றும் பென்ஜான்சனின் மகத்துவமான உச்சத்திற்குப் பிந்தைய வீழ்ச்சியையே கொண்டிருந்தன. எனினும் பிலிப்மாசிங்கர்ஜேம்ஸ்ஷிர்லே மற்றும் ஜான்ஃபோர்டு போன்ற சிலநாடக ஆசிரிகர்கள், சுவாரஸ்யமான ஆக்கப்பூர்வ படைப்புகளை அளித்தனர். ரிச்சர்ட்ப்ரோபின் நகைச்சுவை நாடகங்களும் விமர்சன ரீதியிலான பாராட்டைப் பெற்றன.

கரோலின்காலத்து கவிஞர்கள் . கவேலியர்கவிஞர்கள (தாமஸ்கேர்யூ, ரிச்சர்டுலவ்லேஸ்மற்றும்சர்ஜான்சக்லிங்) மற்றும் மெடாபிசிகல் கவிஞர்கள் (ஜார்ஜ்ஹெர்பெரட், ஹென்றிவாகன், கேதரின்பிலிப்ஸ்) போன்றோர் ஆவர். புகழ்பெற்ற கவிஞர் ஜான்டான் மற்றும் எழுத்துக்கலையில் வல்லராபர்ட் ஹெரிக் போன்றோர் இக்காலத்தில் வாழ்ந்தனர். எலிசபெத்காலம் ஆங்கில நாடகக்கலையின் பொற்காலமாக விளங்கியது எனில்கரோலின் காலம் நாடகமற்ற கவிதைகளின் காலமாக விளங்கியது. ஜான்மில்டனின் ஆரம்பகால எழுத்துப்பணி இந்தக்காலத்தில் தொடங்கியது.  

இலக்கிய திறனாய்வுத்துறையில் ஹென்றிரேனால்டின்டை தோமைட்ஸ் என்ற புத்தகம் 1932 ல்வெளியானது . இதில் எழுத்தாளர் நியோப்ளோடோனிசத்தை முறையாககவிதையில் நடைமுறைப்படுத்த முயற்சித்தள்ளார். இந்த நடைமுறையின் விளைவு வித்தியாசமான ரசனைகள் வெப்பமண்டலக்காடு எனவும் நெறிபிறழ்ந்தரசனை எனவும் குறிப்பிடப்பட்டது. [1]

கலை[தொகு]

காட்சிக்கலையில் ஆண்டனிவான்டைக்கின் (1633- 1641) வரை அரசரின் ஓவியராக பதவி வகித்தவர் ஓவியங்கள் அதிகதாக்கத்தை ஏற்படுத்தின. சில நேரங்களில் ஆங்கில ஓவியக்கலையின் அடித்தளகாக இவருடைய ஓவியங்கள் கருதப்படுகின்றன. 1641 ல் டைக்கின் இறப்புக்குப் பின் அரசக்குடும்ப ஓவியராக முறையாக இல்லாவிடினும் நடைமுறையின் படி வில்லயம் டாப்சன் (1610-1646) நியமிக்கப்பட்டார். இவர் ஆங்கில ஓவியத்தின் சொந்த மண்ணில் பிறந்த முக்கிய ஓவியர். இனிகோ ஜோன்ஸ் கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பில் தனது பங்கை ஆற்றினார் கோர்ட் மாஸ்க் கின் விசித்திரமான கலை வடிவம் பல்வேறு எழுத்தாளர்களால் குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக பென் ஜான்சனின் த பைனல் மாஸ்க் (1625 ல் பதிப்பிக்கப்பட்டது) இந்த ஷோபிஸனுக்கு செய்யப்பட்ட வரம்புமீறிய செலவானது (ஒரு கோர்ட் மாஸ்க்கின் தயாரிப்பு செலவு தோராயமாக £ 15000) பல புகார்களுக்கும் விமர்சனங்களுக்கும் வித்திட்டது. குறிப்பாக ப்யூரிட்டன்கள் அரசருக்கு எதிராகக் குறிப்பிட்ட முக்கிய புகராக இது அமைந்தது.

அறிவியல் மற்றும் கணிதம்[தொகு]

பிறகு சிந்தனையில் ஏற்பட்ட புரட்சிகரோலின் காலம் முழுவதும் நீடித்தது. 1627 ல்பதிப்பிக்கப்பட்ட பேக்கனின் திநியூஅட்லாண்டிஸ் புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தனிமனிதர்களுக்கான புதிய முன்னுதாரணத்தின் பரிணாம வளர்ச்சியாக இருந்தது. ராயல்சொசைட்டியில் பெரும்பாலானோர் பள்ளிச்சிறுவர்கள் மற்றும் மாணவர்களே ஆவர். ஜான்வில்கின்ஸ்கோபர்னிகன் ஆஸ்ட்ரோனமி மற்றும் அறிவியல் அட்வகேசியில் பலபடைப்புகளை வெளியிட்டிருப்பினும் திடிஸ்கவரி ஆப்எவேல்ட்இன்தமூன் (1638) மற்றும் எடிஸ்கோர்ஸ்கான்சரனிங்எ நியூ ப்ளானட் மூலம் முத்திரை பதித்தார். 

உரிய அறிவியல் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் இல்லாமையால் கரோலின்கால விஞ்ஞானிகளும் ப்ரோட்டோவிஞ்ஞானிகளும் இயற்கைத்தத்துவவியலாளர்களும் இரக்ககுணம் கொண்ட பிரபுக்களின் அடைக்கலத்திலேயே இருந்தனர். இது ஒரு பழைய நிகழ்வு ஆகும். எலிசபெத் மற்றும் ஜேம்ஸின் ஆட்சிக்காலத்திலும் விசார்ட்எர்ல் ஆப்நார்த்தம்பர்லேண்ட் என்னும் பல விஞ்ஞானிகள் இருந்தனர். கரோலின் காலவிஞ்ஞானிகள் ஒரே மாதிரியான குழுவாக இருந்தனர். இந்தக் குழுக்கள் ஆல்கெமி ஆஸ்ட்ராலஜி நியோப்ளாட்டோனிசம், காப்பாலா மற்றும் சிம்பதடிக்மேஜிக் போன்றவைகளின் இருள்சூழ் பிரிவுகளை தனிமனிதர்கள் தவிர்க்க உதவின. (எ.கா. சர்கெனெலம்டிக்பையின்பவுடர்ஆப்சிம்பத்தி) 

கணிதத்துறையில் ஒரே ஆண்டில் (1631) மூன்று பெரியபடைப்புகள் வெளியிடப்பட்டன. திஆர்டிஸ்அனலைடிகே ப்ராக்ஸிஸ் தாமஸ்ஹாரியட்க்ளாவிஸ் மேத்தமேடி கேவில்லியம்ஆட்ரட் (பெருக்கல் செயல்பாட்டிற்கான குறியீட்டை அளித்தவர்) ஆகியன நவீன கணிதமொழியின் பரிணாமவளர்ச்சிக்கு உதவின. தத்துவதுறையில் தாமஸ்ஹாப்ஸ் (1588- 1676) பல படைப்புகளை எழுதி இருந்தாலும் கரோலின் கால முடிவுவரை அவைபதிக்கப்படவில்லை. 

ராபர்ஃப்ளட் தன்னுடைய பெரிய படைப்புகளை வெளியிட்டார். 1626 ல்பிலாசோபியாசாக்ரா (பிளட்டின்ஹிஸ்டரி ஆப்தமேக்ரோகாஸம் அன்ட்மைக்ரோஸம் இரண்டாம் தொகுப்பு புத்தகத்தில் நான்காவது பகுதியின் முதல்பிரிவு ட்ராக்டேட்ஐஐ) மற்றும் 1629, 1631 ம் ஆண்டுகளின் வெளியிடப்பட்ட மருத்துவப் பாடப்புத்தகமான மெடிசினாகேதோலிகாவின் இருபுத்தகங்கள் குறிப்பிடத்தக்கன. ப்ளட்டின் இறுதிப்படைப்பு பிலாசாபியா மொய்செய்க்கா 1638 ல் அவரது இறப்புக்குப் பிறகு வெளியிடப்பட்டது. ஃப்ளட்டின் அறிவுசார் சாதனையானது சிக்கலான உதாரணங்களுடன் கூடியபுத்தகங்களில் வெளிப்படுகிறது அவை படைப்பாளியின் கலாச்சாரச் செறிவூட்டலுக்கான அரிய பொக்கிஷங்கள்  ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

  • Cressy, David. Charles I and the People of England (Oxford UP, 2015).
  • Davies, Godfrey. The Early Stuarts, 1603-1660 (Oxford UP, 1959).
  • Lockyer, Roger. The Early Stuarts: A Political History of England, 1603-1642 (Addison-Wesley Longman, 1999).
  • Quintrell, Brian. Charles I 1625-1640 (Routledge, 2014).

வெளிப்புர இணைப்புகள்[தொகு]