கரோலின் லேங்காட் தொருவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரோலின் லேங்காட் தொருவா (Caroline Langat Thoruwa) கென்யா நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். கென்யட்டா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக இவர் பணியாற்றினார். இப்பல்கலைக்கழக நைரோபி நகர துணை வளாகத்திற்கு இவர் இயக்குநராகவும் செயற்பட்டார் [1].

அறிவியல் மற்றும் பொறியியலில் ஆப்பிரிக்க பெண்கள் என்ற அமைப்பின் தலைவராகவும் லேங்காட் தொருவா செயல்பட்டார் [2][3]. அனைத்துலக பெண்கள், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வலையமைப்புக் குழுவில் உறுப்பினராக இருந்தார் [4]. ஆக்டில் (ACTIL) எனப்படும் ஆப்பிரிக்க அறிவு மையத்தின் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினராகவும் இவர் இருந்தார்[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prof. Caroline Lang'at Thoruwa". Kenyatta University. Archived from the original on 14 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "AWSE Board". AWSE. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
  3. "Kenyan scientist calls for increased funding for biotechnology research". Nigerian Pilot (in அமெரிக்க ஆங்கிலம்). 26 April 2017. Archived from the original on 2017-11-09. பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.
  4. "African science heroes - Planet Earth Institute" (in en-US). Planet Earth Institute. 2015-12-16 இம் மூலத்தில் இருந்து 2017-11-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171112021152/http://planetearthinstitute.org.uk/african-science-heroes/. 
  5. "ACTIL Knowledge Hub". actilhub.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலின்_லேங்காட்_தொருவா&oldid=3928628" இலிருந்து மீள்விக்கப்பட்டது