கரோலின் பொற்கோ
கரோலின் பொற்கோ Carolyn Porco | |
---|---|
![]() | |
பிறப்பு | மார்ச்சு 6, 1953 பிரான்க்சு, நியூ யோர்க் மாநிலம், அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | கோள் அறிவியல் படிம அறிவியல் |
பணியிடங்கள் | இயக்குதலுக்கான காசினி படிம்மாக்க மைய ஆய்வகம், கொலராடோ பல்கலைக்கழகம் (போல்டர்) |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | பீட்டர் கோல்டுரீச் |
அறியப்படுவது | காசினி உருவரை குழுவின் தலைவர்; சனிக்கோள் அமைப்பின் கண்டுபிடிப்புகள்; வாயேஜர் உருவரை குழுத் திட்ட உறுப்பினர்; கோள்வலயங்கள், என்சிலாடசு நிலா வல்லுநர்; புவிப் புன்முறுவல் நாள் நிறுவனர்; அறிவியல் பரப்புனர், மேடைப்பேச்சாளர், திரைப்பட அறிவுரைஞர் |
விருதுகள் | பொர்க்கோ சிறுகோள்; இலென்னார்ட் நில்சன் விருது (2009); அவாக (AAS) கார்ல் சாகன் பதக்கம் (2010); கால்டெக் தகவுறு முற்பணியாளர் விருது (2011); டைம் விண்வெளியில் பெருந்தாக்கம் விளைவித்த 25 பேரில் ஒருவர் (2012) |
கரோலின் சி. பொற்கோ (Carolyn C. Porco) (பிறப்பு மார்ச் 6, 1953) ஓர் அமெரிக்க கோள் அறிவியல் வல்லுனர். இவர் சூரியக் குடும்ப வெளிப்புற மாண்டல ஆய்வுக்குப் பெயர்பெற்றவர். வியாழனுக்கான வாயேஜர் திட்டத்தில் தொடங்கி, காரி (சனி), யுரேனசு, நெப்டியூன் பல கோள் தேட்டங்களில் 1980 களில் பங்குபற்றினார். இப்போது காரிக்கோளை சுற்றிவரும் நடப்புக் காசினி- ஐகன்சு உருவரைத் திட்டக் குழுவை வழிநடத்துகிறார்.[1]
இவர் பின்வரும் அறிவியல் புலங்களில் 110 அளவுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பலரோடு இணைந்து ஆய்வுரைகளைத் தந்துள்ளார்: உரேனசு, நெப்டியூன் கதிர்நிரலியல், உடுக்கனவெளி ஊடகம், கோள், நிலா ஊடாட்ட வலயங்களின் ஒளியளவியல், கோள்வலயக் கணினிப் படிம்மாக்கம், திரைத்தன் நிலா நிலமுனைக் கவிப்புகளின் வெப்பவியல் சமனிலை, வியாழன் அகட்டின் வெப்பப் பாய்வு, காசினி செய்முறைகள் வழியாக, காரிக்கோளின் வளிமண்டலம், கோள்வலயங்களின், விளைவுகள் பற்றிய ஆய்வு முடிவுகள்.[2]
பொற்கோ புவிப் புன்முறுவல் நாளின் நிறுவனர் ஆவார். இவர் 1998 இல் பெயர்பெற்ற கோள் புவியியலாலரான யூகின் சூமேக்கரைப் பெருமைப்படுத்த ந்லாவுக்கு நிலாத் தேட்ட விண்கலம் வழியாக அவரது எரிசாம்பலை அனுப்ப முன்மொழிந்து அதற்குரிய விளம்பர முழக்கத்தையும் வடிவமைத்துத் தந்தார்.[3][4]
இவர் பெயர்பெற்ற மேடைப்பேச்சாளர் ஆவார், இவர் TEDயில் இரு மக்களுக்கான அறிவியல் உரையாற்றியுள்ளார்.[5][6] மேலும் இவர் 2006 மே மாதத்தில் ஆறு உலக நகரங்களில் ஒருங்கிணைத்து ஒலிபரப்பிய புவிப் பெருங்கண்ட நாள் (Pangea day) கொண்டாட்டத்துக்கு அறிமுகவுரையும் ஆற்றியுள்ளார். இவ்வுரையில் மாந்தரின நிலவுகையின் அண்ட முதன்மையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[7] பொற்கோ அவருடைய அறிவியல், மக்கள்நலத் தொண்டுய்களுக்காகப் பல விருதுகளையும் தகைமைகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக, 2009 இல் நியூஸ்டேட்மன் இதழ் இவரை இன்றைய உலகின் பாராட்டுதலுக்குரிய 50 சிறந்தவர்களில் ஒருவராகத் தேர்வு செய்தது.'[8] 2010 இல் மக்கள் அறிவியல் பரப்புரையில் திறம்பட தொண்டு புரிந்ததற்காக அமெரிக்க வானியல் கழகம் இவருக்குக் கார்ல் சாகன் பதக்கத்தை வழங்கியது.[9] மேலும் 2012 இல் விண்வெளியில் அரும்பெருஞ் செயல் புரிந்த 25 பேரில் ஒருவராக Time இதழ் பாராட்டியுள்ளது.[10]
கல்வி
[தொகு]பொற்கோ நியூயார்க் நகரில் பிறந்தார். இவர் 1970 இல் பள்ளிப்படிப்பை அங்கு பிராங்சில் உள்ள கார்டினல் சுபெல்மன் உயர்நிலைப் பள்ளியில் முடித்துள்ளார்.இவர் 1974 இல் தன் இளவல் பட்டத்தைச் சுட்டோனிபுரூக்கில் உள்ள நியூயார்க் அரசு பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவர் 1983 இல் தன் முனைவர் பட்டத்தைக் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் புவி, கோள் அறிவியல் புலங்களில் பெற்றுள்ளார்,.[11] பீட்டர் கோல்டுரீச் மேற்பார்வையில் வாயேஜர் திட்டத்தில் கண்டறிந்த காரிக்கோள் வலயங்களைப் பற்றிய ஆய்வின் பட்டறிவைத் தன் முனைவர் ஆய்வுரையாக வடிவமைத்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cassini Solstice Mission: Team Members". JPL. Retrieved 2013-04-03.
- ↑ "Cassini Imaging Team Science Results". CICLOPS. Archived from the original on 2011-07-13. Retrieved 2012-01-06.
- ↑ Porco, C. C. (February 2000). "Destination Moon" (PDF). Astronomy. pp. 52–55.
- ↑ Porco, C. C. (April 13, 2006). "Eugene M. Shoemaker: A Tribute". CICLOPS. Retrieved 2012-01-06.
- ↑ Porco, C. C. (March 2007). "This is Saturn". TED. Archived from the original on 2014-02-26. Retrieved 2012-01-06.
- ↑ Porco, C. C. (February 2009). "Could a Saturn Moon Harbor Life?". TED. Archived from the original on 2014-02-22. Retrieved 2012-01-06.
- ↑ "Pangea Day Intro". யூடியூப். May 10, 2008. Retrieved 2012-01-06.
- ↑ "The 50 people who matter today: 31-40". New Statesman. September 24, 2009. Retrieved 2012-01-06.
- ↑ "Cassini Imaging Leader Honored With American Astronomical Society Carl Sagan Award". CICLOPS. Retrieved 2013-08-22.
- ↑ Bjerklie, D. (Fall 2012). "The 25 Most Influential People in Space". TIME: pp. 88–99 இம் மூலத்தில் இருந்து 2013-05-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130515121347/http://www.amesteam.arc.nasa.gov/NewsArticles/TIME_Space_Allamandola_25MostInfluentialPeopleinSpace.pdf.
- ↑ "Caltech Commencement Program" (PDF). Caltech Campus Publications. 1983-06-10. Retrieved 2013-03-29.
வெளி இணைப்புகள்
[தொகு]- CarolynPorco.com – Official website
- Pangea Day opening speech by Carolyn Porco பரணிடப்பட்டது 2008-04-28 at the வந்தவழி இயந்திரம்
- Podcast on the Cassini mission by Carolyn Porco பரணிடப்பட்டது 2008-09-07 at the வந்தவழி இயந்திரம்
- Carolyn Porco Twitter page