உள்ளடக்கத்துக்குச் செல்

கரேலியனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரேலியனைட்டு
Karelianite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுV2O3
இனங்காணல்
நிறம்கருப்பு
மிளிர்வுஉலோகத் தன்மை
ஒப்படர்த்தி4.95

கரேலியனைட்டு (Karelianite) என்பது V2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். வனேடியம் மூவாக்சைடின் இயற்கைத் தோற்றம் கரேலியனைட்டு ஆகும். இதுவோர் அரிய கனிமமாகும். வேதியியலின் அடிப்படையில் இது ஏமாடைட்டு, குருந்தம், எசுகோலைட்டு, திசுட்டாரைட்டு, பிக்சுஸ்பைட்டு, அவிசென்னைட்டு மற்றும் இட்ரியடைட்டு-(Y) ஆகியவற்றின் வனேடியம் ஒப்புமையாகக் கருதப்படுகிறது. இந்த பெயர் பின்லாந்து-உருசிய எல்லையில் உள்ள கரேலியாவிலிருந்து வந்ததாகும். கரேலியனைட்டு மக்னீசியம் நிறைந்த பாறைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Karelianite: Mineral information, data and localities". www.mindat.org. Retrieved 2019-04-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரேலியனைட்டு&oldid=4132791" இலிருந்து மீள்விக்கப்பட்டது