கரு நிழல், அணுகு கரு நிழல் மற்றும் எதிர் கரு நிழல்
கரு நிழல், அணுகு கரு நிழல் மற்றும் எதிர் கரு நிழல் (Umbra, penumbra and antumbra)ஆகியவை நிழலின் பல்வேறு பகுதிகள் ஆகும். ஒளிமூலத்திலிருந்து வரும் ஒளிக்கதிர் ஒரு ஒளிபுகாத பொருளின் மீது படும் போது நிழல் உருவாகிறது. புள்ளி ஒளிமூலம் கரு நிழலை மட்டுமே உருவாக்கும். வான்வெளிப் பொருட்கள் உருவாக்கும் நிழலைப் பற்றி குறிப்பிடவே இந்தப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சூரியப் புள்ளிகளின் கருமைத்தன்மையை அறியவும் இந்தப் பெயர்கள் உதவுகின்றன.
கரு நிழல்[தொகு]
umbra என்ற வார்த்தைக்கு இலத்தீன் மொழியில் "நிழல்" என்று பொருள். இது நிழலின் கருமையானதும் உள்பகுதியுமானதுமாகும். இந்தப் பகுதியில் ஒளியானது முழுமையாகத் தடுக்கப்படுகிறது. கரு நிழல் பகுதியில் உள்ள ஒரு நோக்குநர் முழுமையான கிரகணத்தைப் பார்க்கிறார். உருண்டையான ஒளிப் புகாதப் பொருட்களின் வழியே பாயும் ஒளி, நேர்வட்டக் கூம்பு வடிவில் நிழலை உருவாக்குகிறது.[1]
அணுகு கரு நிழல்[தொகு]
paene என்ற வார்த்தைக்கு இலத்தீன் மொழியில் "கிட்டத்தட்ட" என்று அர்த்தம். இது நிழலின் வெளிப்பகுதியும் ஆகும். இந்தப் பகுதியில் ஒளியானது முழுமையாகத் தடுக்கப்படுதில்லை. அணுகு கரு நிழல் பகுதியில் உள்ள ஒரு நோக்குநர் பகுதி கிரகணத்தைப் பார்க்கிறார்.[2]
எதிர் கரு நிழல்[தொகு]
ante என்ற வார்த்தைக்கு இலத்தீன் மொழியில் "பின்னால்" என்று அர்த்தம். இது நிழலின் முடிவுப்பகுதியும் ஆகும். இந்தப் பகுதியில் நிழல் முடிந்து ஒளி துவங்குகிறது. எதிர் கரு நிழல் பகுதியில் உள்ள ஒரு நோக்குநர் வலயக் கிரகணத்தைப் பார்க்கிறார். ஒரு பிரகாசமான வளையம் இப்பகுதியில் தெரியும். நோக்குநர் ஒளி மூலத்தை நோக்கி செல்லும் போது வளையத்தின் அகலம் சிறிது சிறிதாகப் பெரிதாகிக் கருநிழல் பகுதியில் முடிகிறது.
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Lecture 9: Eclipses of the Sun & Moon". ohio-state.edu. July 16, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Event Finding Subsystem Preview[தொடர்பிழந்த இணைப்பு] Navigation and Ancillary Information Facility.