கரு ஊமத்தை
கரு ஊமத்தை | |
---|---|
![]() | |
![]() | |
'Fastuosa' | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | மெய்யிருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | கத்தரி வரிசை |
குடும்பம்: | கத்தரிக் குடும்பம் |
பேரினம்: | Datura |
இனம்: | D. metel |
இருசொற் பெயரீடு | |
Datura metel லி. |
கரு ஊமத்தை (Datura metel) மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு தாவரமாகும். இது சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. சீன மூலிகை மருத்துவத்தின் 50 முக்கிய மூலிகைகளுள் ஒன்றாகும். திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது ஊமத்தை ஆகும்.[1]
மருத்துவ குணங்கள்[தொகு]
- தோல் நோய்கள், புண், அரிப்பு, கிருமி, நீர் கடுப்பு[2] உள்ளிட்டவைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- பொதுவாக நோய் தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேறுக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது[3]
பாரப்பா தங்க பற்பம் சொல்லக் கேளு
பாங்கான தங்கத்தின் காசு வாங்கி
நேரப்பா கருமத்தின் இலையரைத்து
நெகிழவே கவசித்து சீலை செய்து
சீரப்பா கசப்புடமே இட்டாயானால்
சிறப்புள்ள பற்பமது என்ன சொல்வேன்
காரப்பா பற்மதை லேகியத்தில் உண்ணும்
பாங்கான மண்டலம்தான் பத்தியம்தான் பாரே
கார்க்கவே திரேகம்தான் சட்டை தள்ளும்
பாங்கான திரேகமது வச்சிரகாயம்
தீர்க்கவே இறைச்சி வகை யாவும் கூட்டு
தெளிவாக நண்டு கறி கூட்டு கூட்டு
ஆற்கவே சேத்துமங்கள் தொண்ணூற்றாரும்
அகன்றுபோம் கூடுவிட்டு காசரோகம்
வேர்க்கவே சமம் ஈளை சுவாசங்காசம்
மிரண்டே ஓடிப்போகும் எனப் பேசினோமே.
மேலும் பார்க்க[தொகு]
குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ http://www.shaivam.org/sv/sv_umaththai.htm
- ↑ "ஊமத்தையை -உன்மத்த ,கனகம்,ததூர". http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/03/blog-post_26.html#ixzz2ABQb95ye. பார்த்த நாள்: அக்டோபர் 24, 2012.
- ↑ குப்புசாமி. "ஊமத்தை". http://mooligaivazam-kuppusamy.blogspot.in/2007/11/blog-post_11.html. பார்த்த நாள்: அக்டோபர் 24, 2012.