கருவூலம் மற்றும் கணக்குத்துறை, தமிழ்நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருவூலம் (treasury) என்பது நிதி மற்றும் வரிவிதிப்பு தொடர்புடைய அரசுத்துறையையோ விலையுயர்ந்த பொருட்களையும் (தங்கம், வைரம் போன்றவை) நாணயத்தையும் சேமித்து வைக்கும் இடமாகும். கருவூலத்தின் தலைவர் கருவூலநாயகம் (treasurer) எனப்படுகின்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலராக இல்லாத நிலையில் இவருக்கு கருவூலத்தின் செல்வத்தை ஆளும் உரிமை இல்லாதிருக்கும்.

தமிழ்நாட்டில் அனைத்துக் கருவூலங்களும் வருமானத்துறையின் கீழ் இயங்கி வந்தன. 1954ஆம் ஆண்டில் கருவூலங்கள், தணிக்கைப் பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நிதித் துறையின் கீழாக சென்னையில் ஊதியக் கணக்கு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. 1962ஆம் ஆண்டில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை உருவானது.[1]

அமைப்பு[தொகு]

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டியங்கும் கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் அலுவலகத்தின் கீழ் தற்போது கீழ்வரும் அலுவலகங்கள் உள்ளன[1] :-

  • 9 ஊதியக் கணக்கு அலுவலகங்கள்,
  • 6 கருவூலம் மற்றும் கணக்குத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள்,
  • 32 மாவட்டக் கருவூலங்கள்,
  • 229 துணைக் கருவூலங்கள்,
  • 1 ஓய்வூதிய பட்டுவாடா அலுவலகம், சென்னை,
  • 1 முத்திரைகள் துணை கண்காணிப்பாளர் அலுவலகம்

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "The Department of Treasuries and Accounts". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் 27 சனவரி 2015.

வெளியிணைப்புகள்[தொகு]