கருவியியல் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டுப்பாட்டு வால்வு

கருவியியல் (அல்லது) கருவிமயமாக்கல் பொறியியல் (ஆங்கிலத்தில்: INSTRUMENTATION) என்பது பொறியியலில் முக்கியமான துணைப்பிரிவாகும். இது அளவீட்டு கருவிகளைப் உபயோகப்படுத்தி தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை அளவீடவும், கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது உற்பத்தி, ஆய்வகம், தயாரிப்பு நிறுவனங்களில் செயல்முறை மாறிகளை(process variables) கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் கலை மற்றும் அறிவியல் துறை ஆகும்.

கருவி என்பது இயற்பியல் அளவுகளான வெப்பநிலை, மட்டம், தொலைவு, கோணம், ஒட்டம் மற்றும் அழுத்தத்தினை அளவீடும் சாதனம் ஆகும். கருவிகள் வெப்பமானிகள் போன்று நேரடியாக அளவீடும் எளிய சாதனமாகவோ அல்லது பல்வேறு காரணிகளை அளவீடும் சிக்கலான செயல்முறை பகுப்பாய்விகளாக இருக்கலாம். சுத்திகரிப்பு நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் ஆகியவற்றில் கருவிகள் பெரும்பாலும் ஒரு கட்டுப்பாடு அமைப்பின் அங்கமாக இருக்கும். அளவீடவேண்டிய மாறிகளை அளவீட உதவும் கையடக்க கருவிகளும்(Handheld devices) கருவியியலின் ஒர் பகுதியாகும். பொதுவாக ஆய்வகங்களில் பல்வேறுவிதமான கையடக்க கருவிகள் பயன்படுத்தப்படுகிறது இருப்பினும் மேற்கத்திய நாடுகளின் வீடுகளில் பயன்படுத்தப்படும் "புகைக் கண்டறிவானும்" (smoke detector) கையடக்க கருவியாகும்.

கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைக்கப்பட்ட கருவியானது, இறுதிக் கட்டுப்பாட்டு சாதனங்களான வால்வுகள் (valves), வரிச்சுருள்கள்(solenoides), சீரியக்கிகள்(regulators), இடைமாற்றீடுகள்(relays), சுற்றுத் தகாப்பான்கள்(circuit breakers) ஆகியவற்றை இயக்க சமிக்ஞைகளை வழங்குகிறது. இந்த சாதனங்கள் தொலை(remote) அல்லது தானியங்கி கட்டுப்பாடுகளின்(automatic control) மூலம் தேவையான வெளியீட்டு மாறிகளை கட்டுப்படுத்துகிறது.

பரப்பி (transmitter) ஒரு கருவியியல் சாதனமாகும் , இது 4-20மில்லிஅம்பியர் அலைமருவி மின்சாரத்தினை சமிக்ஞைகளாக வெளியீடுகிறது, இது கணினிமயமாக்கப்பட்ட ஆளிக்கு(plc, dcs, scada) எடுத்துச்செல்லப்பட்டு புரிந்துகொள்ளக்கூடிய தகவலாக மாற்றப்பட்டு பின்பு பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு தொழிற்சாலைகளின் செயற்முறைகளையோ அல்லது இறுதிக் கட்டுப்பாடு சாதனங்களையோ கட்டுப்படுத்துகிறது.

அளவீடு[தொகு]

கருவியியல் பல்வேறு இயற்பியல் காரணிகளை அளவீட பயன்படுகிறது, அவை:

  • இரசாயன சேர்மானம்
  • இரசாயன பண்புகள்
  • ஒளியின் பண்புகள்
  • அதிர்வு (vibration)
  • எடை

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

 கருவியியல் – விளக்கம்

[1]

  1. "அண்ணா பல்கலைக்கழகம் கருவியியல்". 2016-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. செப்டம்பர் 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.