கரும்பு விதைப் பண்ணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரும்பு விதைப் பண்ணை (Sugarcane Seed Farm) இந்தியாவை தளமாகக் கொண்ட ஓர் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் கரும்பு உற்பத்தி நிறுவனமாகும். கேரள அரசின் வேளாண்மைத் துறையின் கீழ் இவ்வமைப்பு 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[1]

கரும்பு விதைப் பண்ணை கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள, பந்தளம் நகரத்தில் அமைந்துள்ளது. பந்தளம்-கைபட்டூர் சாலையில் பந்தளம் நகருக்கு அருகே கடக்காட்டில் 10.96 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணை காய்கறிகள், வாழைப்பழங்கள், தேங்காய் விதைப் பண்ணை, கரும்பு விதைப் பண்ணை மற்றும் நவீன பால் பிரிவு ஆகியவற்றில் கரிம முறை வேளாண்மைக்கு பெயர் பெற்றதாக அறியப்படுகிறது. .

ஒருங்கிணைந்த விவசாயத்தில் வெற்றிபெற்ற கரும்பு விதைப் பண்ணை அரசாங்கத்திற்கு சொந்தமான விவசாய பண்ணையை விவசாயிகளுக்கு ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. கரும்பு விதைப் பண்ணையின் விவசாய அலுவலருக்கு 2010 ஆம் ஆண்டில் கேரள மாநில அரசின் அரிதா கீர்த்தி விருது வழங்கப்பட்டது.[2][3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "An integrated govt farm shows the way". பிசினஸ் லைன். http://m.thehindubusinessline.com/news/national/an-integrated-govt-farm-shows-the-way/article7880663.ece. பார்த்த நாள்: 18 September 2017. 
  2. "A model integrated farming demonstration centre at Pandalam". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/a-model-integrated-farming-demonstration-centre-at-pandalam/article2098997.ece. பார்த்த நாள்: 18 September 2017. 
  3. "Sugarcane Cultivation Proves Remunerative in Pandalam". Sugar News இம் மூலத்தில் இருந்து 18 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170918110555/http://sugarnews.in/sugarcane-cultivation-proves-remunerative/. பார்த்த நாள்: 18 September 2017. 
  4. "High-tech dairy farm to come up at Koothali, following the model of the Sugarcane Seed farm at Pandalam". Times of India. http://m.timesofindia.com/city/kozhikode/High-tech-dairy-farm-to-come-up-at-Koothali/articleshow/27375133.cms. பார்த்த நாள்: 18 September 2017. 
  5. "Sugarcane cultivation proves remunerative in Pandalam". தி இந்து. http://m.thehindubusinessline.com/economy/agri-business/sugarcane-cultivation-proves-remunerative/article7522637.ece. பார்த்த நாள்: 18 September 2017. 
  6. "A model in integrated, sustainable farming in Pandalam". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/a-model-in-integrated-sustainable-farming/article2100247.ece. பார்த்த நாள்: 18 September 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்பு_விதைப்_பண்ணை&oldid=3932358" இலிருந்து மீள்விக்கப்பட்டது