கரும்பு செவ்வழுகல் நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரும்பு செவ்வழுகல் நோய்(கொல்லட்டோடிரிக்கம் ஃபால்கேட்டம்) என்னும் பூசணம் தாக்குவதால் ஏற்படுகிறது. இந்நோய் திடீரென அதிக அளவில் தோன்றி பெரும் சேதத்தை உருவாக்கும். அறிகுறிகள் ஆரம்பத்தில் தெரியாமல் கரும்பு முதிரும் போது தெரியும். இலையின் நுனிப்பாகம் மஞ்சளாகி தண்டின் உள்ளே சிவப்பு நிறமாகவும் வெண்ணிற படைகளும் தெரியும். தண்டிலுள்ள சர்க்கரை பூசணத்தணால் நொதிக்கப்பட்டு சாராயமாக மாறி நாற்றம் வீசும். இதை கட்டுப்படுத்த கார்பண்டாசிம் மருந்து விதை நேர்த்தி மற்றும் இலையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.[1]

  1. எச்.லிவின் தேவசகாயம், பயிர்களின் நோய்கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்பு_செவ்வழுகல்_நோய்&oldid=2339885" இலிருந்து மீள்விக்கப்பட்டது