உள்ளடக்கத்துக்குச் செல்

கருமுட்டை வெளிப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருமுட்டை வெளிப்பாடு
லூட்டினைசிங் இயக்குநீர் அதிகரித்ததைத் தொடர்ந்து, கருப்பைக் குழாயில் ஒரு சூல்முட்டை (முதிர்ச்சியடையாத கருமுட்டை) வெளியிடப்படும், பின்னர் அது 12 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுக்களால் கருவுறுவதற்குக் கிடைக்கும். கருமுட்டை வெளிப்பாடனது மாதவிடாய் சுழற்சியின் கருப்பை நுண்ணறைக் கட்டத்தின் முடிவையும் லூட்டல் கட்டத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
அடையாளங்காட்டிகள்
MeSHD010060
TEவெளிப்பாடு_by_E1.0.0.0.0.0.7 E1.0.0.0.0.0.7
உடற்கூற்றியல்

கருமுட்டை வெளிப்பாடு அல்லது சூல்முட்டை வெளிப்பாடு என்பது சூலகத்தில் இருந்து சூல் முட்டைகளை விடுவிப்பதாகும். மனிதர்களில், சூலக நுண்ணறைகள் சிதைந்து இரண்டாம் நிலைக் கருவணுச் செல்களை வெளியிடும் போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.[1] கருமுட்டை வெளிப்பட்ட பின்னர், மதவிடாய்ச் சுழற்சியின் மஞ்சள் சடலக் கட்டத்தில், கரு முட்டையானது விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட வேன்டும். மேலும், கருவுற்ற புறணி ( கருப்பையகம் ) தடிமனாக மாறினால் தான் கருவுற்ற முட்டையைப் பெற முடியும். கருத்தரித்தல் எதுவும் ஏற்படவில்லை என்றால், மாதவிடாய் காலத்தில் கருப்பை புறணி அல்லது கருப்பைச் சுவர் திறந்து இரத்தம் சிந்தப்படும்.

கருப்பை நுண்ணறைக் கட்டத்திற்குப் பிறகு, மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் கருமுட்டை வெளிப்பாடு ஏற்படுகிறது, அதைத் தொடர்ந்து மஞ்சட்சடல கட்டமும் ஏற்படுகிறது. கருமுட்டை வெளிப்பாட்டின் லுடீனைசிங் இயக்குநீர் (எல்.எச்) மற்றும் கருமுட்டை தூண்டும் இயக்குநீர் (எஃப்.எஸ்.எச்) அளவுகளில் கூர்மையான ஸ்பைக் மூலம் வகைப்படுத்தப்படுகிறது, இதன் விளைவாக நுண்ணறைக் கட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு உச்சமாகிறது.
இந்த வரைபடம் கருமுட்டை வெளிப்பாட்டு நேரத்தில் சுற்றியுள்ள ஹார்மோன் மாற்றங்களையும், அதன் நேரத்திற்குள் இடை-சுழற்சி மற்றும் பெண்களுக்கு இடையிலான மாறுபாடுகளையும் காட்டுகிறது.

மனிதர்களில், கருப்பை நுண்ணறை பெருக்கும் கட்டத்திற்கு பிறகு, மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் கருமுட்டை வெளிப்பாடு ஏற்படுகிறது. கருமுட்டை வெளிப்பாட்டின் நாட்கள் (28 நாள் சுழற்சியின் தோராயமாக 10 முதல் 18 வரை), இனப்பெருக்கத்திற்கு மிகவும் ஏற்ற கால கட்டமாகும்.[2][3][4][5] கடந்த மாதவிடாய் நாளின் (எல்.எம்.பி) ஆரம்பம் முதல் கருமுட்டை வெளிப்படும் காலம் வரை சராசரியாக 14.6 [6] நாட்கள் ஆகும், ஆனால் இது பெண்ணுக்குப் பெண்ணும் , மாதவிடாய் சுழற்சிகளுக்கும் இடையில் கணிசமாக மாறுபாடுவதாக உள்ளது, ஒட்டுமொத்தமாக 95% 8.2 முதல் 20.5 நாட்கள்வரை கணிப்பு இடைவெளி அமைகிறது.

கருமுட்டை வெளிப்பாட்டின் செயல்முறை மூளையின் ஹைபோதாலமஸால் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் பிட்யூட்டரி சுரப்பியின் முன்புற மடலில் சுரக்கும் ஹார்மோன்களின் வெளியீடு, லுடினைசிங் இயக்குநீர் மற்றும் கருமுட்டை தூண்டும் இயக்குநீர் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது.[7] மாதவிடாய் சுழற்சியின் முன்கூட்டிய கால கட்டத்தில், குமுலஸ் விரிவாக்கம் எனப்படும் கருப்பை நுண்ணறை பெருக்கும் கட்டத்தில் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்படும், இது கருமுட்டை தூண்டும் இயக்குநீரால் தூண்டப்படுகிறது. இது முடிந்த பின்னர், குறி எனப்படும் ஒரு துளை கருப்பை நுண்னறையில் உருவாகும். இரண்டாம் நிலை கருவணு முட்டை இந்த துளை மூலம் நுண்ணறைவிட்டு வெளியேறும். பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வெளியாகும் கருமுட்டை தூண்டும் இயக்குநீர், லுடினைசிங் இயக்குநீர் ஆகியவற்றின் அளவு அதிகரிப்பதன் மூலம் கருமுட்டை வெளிப்பாடு தூண்டப்படுகிறது. மஞ்சட்சடல (கருமுட்டை வெளிப்பட்ட பின்னான நிலை) கட்டத்தின் போது, இரண்டாம் நிலைக் கருவணு பாலோப்பியன் குழாய்கள் வழியாக கருப்பையை நோக்கிப் பயணிக்கும்.இந்த நேரத்தில் ஒரு விந்து மூலம் கருக்கட்டல் நிகழ்ந்திருந்தால், கருவுற்ற இரண்டாம் நிலைக் கருவணு அல்லது சினை முட்டை 6-12 நாட்களுக்குப் பிறகும் அங்கு உள்வைக்கப்படும்..[8]

கருப்பை நுண்ணறைக் கட்டம்[தொகு]

கருப்பை நுண்ணறைக் கட்டம் அல்லது கருப்பை நுண்ணறைப் பெருக்கக் கட்டம் என்பது மாதவிடாய் சுழற்சியின் கட்டமாகும், இச்சமயத்தின் பொழுது கருப்பை நுண்ணறைகள் முதிர்ச்சியடையும். கருப்பை நுண்ணறைக் கட்டம் மாதவிடாய்த் தொடக்கம் முதல் கருமுட்டை வெளிப்பாட்டின் தொடக்கம் வரை நீடிக்கும்.[9][10]

கருமுட்டை வெளிப்பாடு வெற்றிகரமாக இருக்க, சூல்முட்டையின் உள்படலம் மற்றும் குமுலஸ் ஓபரஸ் கிரானுலோசா செல்கள் எனப்படும் கருப்பை நுண்ணறைச் செல்களும் கருமுட்டையை ஆதரிக்க வேண்டும். பின்னர் திரள் செல்களின் பெருக்கம் என்றழைக்கப்படும் மியூசிபிகேஷன் மற்றும் பெருக்கமானது இக்காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும். மியூசிஃபிகேஷன் என்பது ஒரு ஹைலூரோனிக் அமிலத்தின் சுரப்பு ஆகும், இது திரள் செல்களின் பிணைப்பைச் சிதறடித்து கருமுட்டையைச் சுற்றியுள்ள ஒட்டும் பிணை வினைப்பொருளாகச் சேகரிக்கிறது. இந்தப் பிணைப்பு கருமுட்டை வெளிப்பட்ட பின்னர் கருமுட்டையுடன் இருக்க வேண்டியது, கருத்தரிக்க மிகவும் அவசியம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.[11][12]

திரள் அணுக்களின் எண்ணின் அதிகரிப்பானது, கருப்பை நுண்ணறைத் திரவத்தின் அளவின் கனிசமான அதிகரிப்புக்குக் காரணமாகிறது, இது நுண்ணறை 20 மி.மீ விட்டத்துக்கும் அதிகமாக இருக்கும். கருப்பையின் மேற்பரப்பில் வீக்கம் என்றழைக்கப்படும் கொப்புளத்தை இது உருவாக்குகிறது.  

மேற்கோள்[தொகு]

 1. Ovulation Test பரணிடப்பட்டது 2016-05-02 at the வந்தவழி இயந்திரம் at Duke Fertility Center. Retrieved July 2, 2011
 2. Chaudhuri, S.K. (2007). "Natural Methods of Contraception". Practice of Fertility Control: A Comprehensive Manual, 7/e. Elsevier India. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131211502. பார்க்கப்பட்ட நாள் 2013-11-09.
 3. Allen, Denise (2004). Managing Motherhood, Managing Risk: Fertility and Danger in West Central Tanzania. University of Michigan Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780472030279. பார்க்கப்பட்ட நாள் 2013-11-09.
 4. Rosenthal, Martha (2012). Human Sexuality: From Cells to Society. Cengage Learning. p. 322. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780618755714. {{cite book}}: |access-date= requires |url= (help)
 5. Nichter, Mark (1996). "Cultural Notions of Fertility in South Asia and Their Influence on Sri Lankan Family Planning Practices". Anthropology & International Health: South Asian Case Studies. Psychology Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782884491716. பார்க்கப்பட்ட நாள் 2013-11-09.
 6. Geirsson RT (1991). Ultrasound instead of last menstrual period as the basis of gestational age assignment. 
 7. Marieb, Elaine (2013). Anatomy & physiology. Benjamin-Cummings. p. 915. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780321887603.
 8. Time of implantation of the Conceptus and loss of pregnancy. 1999. 
 9. Littleton, Lynna A. Maternity Nursing Care. Cengage Learning. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781401811921.
 10. Gupta, Ramesh C. (2011). Reproductive and Developmental Toxicology. Academic Press. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123820334.
 11. "Can You Get Pregnant after Ovulation?". coveville.com. 2015-02-03. Archived from the original on 2018-06-18. பார்க்கப்பட்ட நாள் 3 Feb 2015.
 12. "Fertilization: your pregnancy week by week". medicalnewstoday.com. பார்க்கப்பட்ட நாள் 15 Feb 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமுட்டை_வெளிப்பாடு&oldid=3937359" இலிருந்து மீள்விக்கப்பட்டது