கருமாணிக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருமாணிக்கன் என்னும் பெயரில் இருவர் இருந்தனர். இருவரும் அண்ணன் தம்பியர். தொண்டைமான் வழியில் வந்தவர்கள்.

ஒருவன் மாரீங்கூர் கோயிலுக்கு நிலம் வழங்கியவன். [1]

மற்றொரு கருமாணிக்கன் என்பவன் கப்பல் கோவை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் இவன் துவரங்குறிச்சியை அடுத்துள்ள கப்பலூர் என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல். பாண்டியனுடைய படைத்தலைவன். பாண்டியனுக்கு உட்பட்ட ஆட்சித் தலைவன். [2]

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. நடுநாட்டுத் திருக்கோவலூர் வட்டம் இராசேந்திர சிங்கநல்லூராகிய மாரீங்கூர் சிவன் கோயில் கல்வெட்டு (கல்வெட்டு நாள் 06 – 10 0 1341) – சதாசிவ பண்டாரத்தார் ஆய்வு முடிவு.
  2. கருமாசிக்கன் கைதவர்க்குப் பாராளும் வீரர் பரிவீர நாராயணன் – சாசனம் 261. தொண்டைமான் யாதவராயன் என்னும் பட்டம் பெற்றவன். இவன் மாணிக்க ஆழ்வான் எனவும் போற்றப்படுபவன். பாண்டிமண்டலத்து முத்தூற்றுக் கூற்றத்து கப்பலூரானுலகளந்த சோழநல்லூர் கரியமாணிக்க ஆழ்வான் திருவுடை நாயகனான வீரபாண்டியக் காளிங்கராயர் – மாறவர்மன் சாரிபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்காலம் 7ஆம் ஆண்டு (கி. பி. 1341) கல்வெட்டு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமாணிக்கன்&oldid=2736847" இருந்து மீள்விக்கப்பட்டது