உள்ளடக்கத்துக்குச் செல்

கருமாடிக்குட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருமாடிக்குட்டன்

கருமாடிக்குட்டன் ( மலையாளம்: കരുമാടിക്കുട്ടൻ ) என்பது ஆலப்புழாவுக்கு அருகிலுள்ள கருமாடியில் காணப்படும் புத்தர் சிலையின் செல்லப் பெயர்.[1] இந்தப் பெயருக்கு கருமாடியைச் சேர்ந்த சிறுவன் என்று பொருள். இச்சிலையானது 3 அடி உயரம் கொண்டதாக கொண்ட, கருப்பு கிரானைட் கல்லால் செய்யப்பட்டுள்ளது. இச்சிலை 9 முதல் 14 நூற்றாண்டு கால பழமையானது என்று நம்பப்படுகிறது. இச்சிலை அருகிலுள்ள நீரோடையில் "கருமடித் தோடு" என்ற பெயரில் பல நூற்றாண்டுகளாக கேட்பாரற்று கிடந்தது. 1930 களில், காலனித்துவ பிரித்தானிய பொறியியலாளரான சர் ராபர்ட் பிரிஸ்டோ இச்சிலையை கண்டறிந்து இதைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுத்தார். தற்போது இந்தச் சிலை கேரள மாநில அரசின் பாதுகாப்பில் உள்ளது. சிலையின் இடது பகுதி இல்லை. இந்த சிலையின் சிதைவுக்கு காரணம் வரலாற்று விவாதத்திற்கு உட்பட்டதாக உள்ளது.

தலாய் லாமா 1965 இல் கருமாடிக்கு விஜயம் செய்துள்ளார்.

கருமாடிக்குட்டன் தூபி

குறிப்புகள்

[தொகு]
  1. "Karumadi Kuttan". Department of Tourism, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 2 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமாடிக்குட்டன்&oldid=3924800" இலிருந்து மீள்விக்கப்பட்டது