கருப்பொருள் (இலக்கணம்)
Appearance
தமிழ் இலக்கணத்தில் கருப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும். முதற்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். கருப்பொருள்கள் எத்தனை என்பது குறித்துத் தெளிவாகக் குறிப்பிடாத தொல்காப்பியம் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி என்று எட்டு வகைளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதுடன், அவ்வகை பிறவும் கருப்பொருள் ஆகும் என்கிறது. இது பிற்காலத்தில் பதினான்கு என வரையறுக்கப்பட்டது[1]. இப் பதினான்கு கருப்பொருள் வகைகளும் பின்வருமாறு:
- ஆரணங்கு (நிலத்தெய்வம்)
- உயர்ந்தோர் (தலைமக்கள்)
- அல்லோர் (உயர்ந்தோர் அல்லாதவர் அல்லது பொதுமக்கள்)
- புள் (பறவை)
- விலங்கு
- ஊர்
- நீர்
- பூ
- மரம்
- உணா (உணவு)
- பறை
- யாழ்
- பண்
- தொழில்
குறிப்புகள்
[தொகு]- ↑ ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள் விலங்கு ஊர் நீர் பூ மரம் உணா பறை யாழ் பண் தொழில் எனக் கருவி ஈர் எழு வகைத்து ஆகும் - அகப்பொருள் விளக்கம், பாடல் 19
உசாத்துணைகள்
[தொகு]- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- தொல்காப்பியம் பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)
- நாற்கவிராச நம்பி, அகப்பொருள் விளக்கம்[தொடர்பிழந்த இணைப்பு], மதுரைத் தமிழிலக்கிய மிந்தொகுப்புத் திட்டம். (23 சூலை 2010 அன்று பார்க்கப்பட்டது)