கருப்பு வெள்ளை நாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பு வெள்ளை நாரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
எக்ரெட்டா
இனம்:
எ. பிகேடா
இருசொற் பெயரீடு
எக்ரெட்டா பிகேடா
(கெளடு, 1845)[2]
பரம்பல். பச்சை: ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம், நீலம்: இனப்பெருக்கமில்லா காலம்
வேறு பெயர்கள்
  • நோட்டோபோயிக்சு ஆரென்சிசு
  • ஆர்டியா பிகேடா[3]

கருப்பு வெள்ளை நாரை (Pied heron)(எக்ரெட்டா பிகேடா), கருப்பு வெள்ளை கொக்கு[4] என்றும் அழைக்கப்படுவது ஒரு பறவைச் சிற்றினமாகும். இது பருவமழை பெய்யும் வடக்கு ஆத்திரேலியாவின் கடலோர மற்றும் துணைக் கடலோரப் பகுதிகளிலும், வாலேசியா மற்றும் நியூ கினியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.

வகைப்பாட்டியல்[தொகு]

ஆத்திரேலியா வடக்கு மாகாணத்தில் இளம் கொக்கு

இந்த சிற்றினத்தை 1845-ல் முதலில் பறவையியல் வல்லுனர் ஜான் கோல்ட் விவரித்தார். சமீபத்திய வகைப்பாட்டியல் வல்லுநர்கள் இந்த சிற்றினத்தை எக்ரெட்டா பேரினத்தில் வைத்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் எதுவும் இல்லை.[5]

ஆத்திரேலியா பாக் அணையின் மத்தியப் பகுதியில் இரை தேடும், கருப்பு வெள்ளை நாரை
இனப்பெருக்க காலத்தில் சிறப்பு இறகுகளுடன் கருப்பு வெள்ளை நாரை (பாக் அணை - மத்திய பகுதி-ஆத்திரேலிய வடக்கு பிரதேசம்)

விளக்கம்[தொகு]

இது ஒரு சிறிய வகை ஹெரான் ஆகும். இதன் உடல் நீளம் 43 முதல் 55 செ.மீ. வரை இருக்கும். இவை கருமையான மென்மையான இறக்கைகளை, உடல் மற்றும் உச்சி தலையுடன், வெள்ளைத் தொண்டை மற்றும் கழுத்துடன் காணப்படும். தோற்றம் வெள்ளை கழுத்து ஹெரான் போன்றது.[4] ஆண் பறவைகள் (247–280 கி) பெண்களை விட அதிக எடை கொண்டவை (225–242 கி); ஆனால் இரண்டும் தோற்றத்தில் ஒத்தவை.[6]

முதிர்ச்சியடையாத பறவைகளில் தலை உச்சி மற்றும் தலையில் கருமை நிறம் இல்லை. இவை வெள்ளை-கழுத்து ஹெரானின் சிறிய பதிப்புகள் போலத் தோற்றமளிக்கலாம். ஒரு காலத்தில் இச்சிறிய இளம் உயிரிகள் தனிச் சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டன.

வாழிடம்[தொகு]

கருப்பு வெள்ளை நாரையின் வாழ்விடம் ஈரநிலங்கள் மற்றும் ஈரமான புல்வெளிகள் ஆகும்.

நடத்தை[தொகு]

ஓசை[தொகு]

கருப்பு வெள்ளை நாரை பறக்கும் போது இதனுடைய ஒசையானது உரத்த 'அக்' அல்லது 'ஓர்க்' என்பதாகும்.[4] கூட்டைச் சுற்றிக் கொஞ்சும் ஓசையினை எழுப்பும்.[6] இவற்றின் குரல் குறித்து அதிகம் அறியப்படவில்லை.[6]

இனப்பெருக்கம்[தொகு]

இனப்பெருக்கம் பிப்ரவரி முதல் மே வரை நடைபெறுகிறது.[4] இது சதுப்புநிலங்கள் உட்படத் தண்ணீருக்கு மேலே உள்ள மரங்களில் கூடு கட்டுகிறது. பெரும்பாலும் காலனித்துவ வாழ்க்கையினை மற்ற வகை ஹெரான்களுடன் பகிர்ந்துகொள்கிறது. குச்சிகளுக்கிடையே ஒன்று அல்லது இரண்டு நீல-பச்சை முட்டைகளை இடுகின்றது.[4]

உணவு[தொகு]

கருப்பு வெள்ளை நாரை பூச்சிகள், தவளைகள், நண்டுகள், மீன்கள் மற்றும் பிற சிறிய நீர் வாழ் விலங்குகளை உண்ணுகின்றது. பூச்சிகள் இவற்றின் உணவின் மிக முக்கியமான உணவாக உள்ளது. இது தனியாகவோ அல்லது ஆயிரம் பறவைகள் வரை காணப்படும் குழுவாகவோ காணப்படும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2019). "Egretta picata". IUCN Red List of Threatened Species 2019: e.T22697037A155512365. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22697037A155512365.en. https://www.iucnredlist.org/species/22697037/155512365. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. BirdLife International (2008). "Ardea picata". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/144680/0. பார்த்த நாள்: 9 February 2009.  Database entry includes justification for why the species is listed as least concern.
  3. BirdLife International (2006) Species factsheet: Ardea picata. Downloaded from http://www.birdlife.org/datazone/species/index.html?action=SpcHTMDetails.asp&sid=3727 on 25/02/2010
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Pizzey, Graham; Knight, Frank (1997). Field Guide to the Birds of Australia. Sydney, Australia: HarperCollinsPublishers. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-207-18013-X.
  5. "Pied Heron, Egretta picata, Taxonomy". பார்க்கப்பட்ட நாள் 25 February 2010.
  6. 6.0 6.1 6.2 6.3 Kushlan, James Anthony; Hancock, James (2005). The Herons. Oxford University Press. p. 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854981-4.

நூல் பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_வெள்ளை_நாரை&oldid=3606911" இலிருந்து மீள்விக்கப்பட்டது