கருப்பு வெள்ளை நாகணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருப்பு வெள்ளை நாகணவாய் (Asian Pied Starling - Gracupica contra) அல்லது ஆசிய கருப்பு வெள்ளை நாகணவாய் என்பது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென் கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் ஒரு வகைப் பறவையாகும். சமவெளிகளிலும் தாழ்வான மலைச்சாரல்களிலும் சிறு குழுக்களாக இவை காணப்படுகின்றன.[1] இவை பொரி மைனா[2] எனவும் அழைக்கப்படுகின்றன.

உடல் தோற்றம் (அடையாளம் காணல்)[தொகு]

20 செ.மீ. லிருந்து 25 செ.மீ அளவுடைய இம்மைனாக்கள், 75-லிருந்து 100 கி. நிறையுடன் இருக்கும். செம்மஞ்சள் கலந்த சிவப்பு அடிப்பகுதியுடன் கூடிய மஞ்சள் நிற அலகு கொண்டவை. கண்ணைச் சுற்றிய தோல் செம்மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலுடல், தொண்டைப்பகுதி, மார்புப்பகுதி ஆகியவை கருநிறத்தில் இருக்க அலகின் அடிப்பகுதி, கன்னம், உடலின் அடிப்பகுதி, இறக்கைகளின் மறைவுப்பகுதி ஆகியவை பழுப்பு கலந்த வெண்ணிறத்தில் இருக்கும்.

வாழ்விடம்[தொகு]

  1. https://www.beautyofbirds.com/asianpiedstarlings.html
  2. தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம் - பக். 58 (283)