கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம்

கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம் (Black Knight satellite) என்பது 13000 ஆண்டுகளாக புவியை சுற்றி வந்ததாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களை ஆராயும் ஆய்வாளர்களால் நம்பப்பட்ட விண்கலம் ஆகும்.இது வேற்றுலகத்தை சார்ந்தது எனவும் நம்பப்பட்டது.[1][2]
கதைகள் மற்றும் தொன்மங்கள்
[தொகு]இந்த நம்பிக்கை 1954 இல் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஒரு ஆய்வாளர் ஒருவர் செய்தித்தாள்களுக்கு அளித்த செய்தியில் இரண்டு விண்கலங்கள் புவியைச் சுற்றி வருகின்றன என செய்தி வெளியிட்டதில் தொடங்கியது.அந்தச் சமயத்தில் புவியில் யாரிடனும் விண்கலத்தை செலுத்தும் தொழில்நுட்பம் இல்லை.[3]
மீண்டும் 1960 இல் அமெரிக்கக் கடற்படை இதே கருப்பு பொருள் 79° அச்சு சாய்வில் 104.5 நிமிட சுற்று வேகத்தில் புவியைச் சுற்றிவருவது கண்டறியப்பட்டது.இதன் சுற்றுப்பாதை சற்று விசித்திரமானதாக அமைந்துள்ளது. புவிக்கும் இதற்கும் இடையேயுள்ள அதிக தூரம் 1,728 கி.மீ மற்றும் குறைந்த தூரம் 216 கி.மீ.[3][4]
இந்த பொருள் 1998 இல் எஸ்டிஎஸ்-88 செயற்கைக்கோள் தனது பணியின் போது புகைப்படம் எடுத்தது.அப்போது அனைவரும் இது வேற்றுக்கிரக வாசிகளின் உருவாக்கம் என நம்பினார்கள். எனினும் மனிதனின் விண்வெளி நடை ஆரம்பித்த பிறகு இது மறைந்துவிட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Redpath, Martina. "The Truth About the Black Knight Satellite Mystery". Armagh Planetarium. Archived from the original on 9 பிப்ரவரி 2017. Retrieved 10 March 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Flockstra, Hilbert. "ASH Online – Conspiracy Theories 101: The Black Knight Satellite". EPU - American Studies Program. University of Groningen. Archived from the original on 28 மே 2015. Retrieved 21 May 2015.
- ↑ 3.0 3.1 Dunning, B. (4 June 2013). "The Black Knight Satellite". Skeptoid Podcast. Skeptoid Media Inc. Retrieved 10 March 2014.
- ↑ Editors (7 March 1960). "Science: Space Watch's First Catch". TIME Magazine. http://content.time.com/time/magazine/article/0,9171,894745-1,00.html. பார்த்த நாள்: 9 April 2014.