கருப்பு அரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீனாவில் விற்பனை செய்யப்படும் கருப்பு அரிசி

கருப்பு அரசி (Black rice, அல்லது கருஞ்சிவப்பு அரிசி) என்பது நெல் வகைத் தானியங்களில் ஒன்று. இவ்வரிசி அதிக ஊட்ட மதிப்பைக் கொண்டது.

கருமையான அரிசி, ஆசியக் கண்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. பலவகைகளிலும் உணவாகப் பயன்படுகிறது. ஆய்வாளர்கள் இந்த கருமையான அரிசி புற்றுநோயினையும் இதயநோயினையும் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார்கள்.

சீனாவில் விரும்பி உண்ணப்படும் இவ்வரிசியில் சக்கரையின் அளவு குறைவாக உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒரு கரண்டி அளவே உள்ள அரிசியில் எராளமான எதிர் ஆக்சிடன்று உள்ளதாகக் கூறுகிறார்கள். இந்த அரிசியின் தவிட்டினை வெகுவாக ஆய்ந்துள்ளனர். ஆந்திரசையனைன் என்கிற வேதிப்பொருள், அரிசிக்கு கருமை நிறத்தினைக் கொடுக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_அரிசி&oldid=2532232" இருந்து மீள்விக்கப்பட்டது