கருப்பின இயற்பியலாளர்களுக்கான தேசிய அமைப்பு
கருப்பின இயற்பியலாளர்களுக்கான தேசிய அமைப்பு (National Society of Black Physicists, NSBP) என்பது 1977ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும்.[1] இவ்வமைப்பு புலம்பெயர்ந்த ஆப்பிரிக்க இயற்பியலாளர்களின் தொழில்திறனை மேம்படுத்துவதற்கும் இயற்பியல் மாணவர்களிடையே பன்னாட்டு அளவில் அறவியல் அமைப்பை ஏற்படுத்துவதற்கும் உருவானது.
வரலாறு
[தொகு]1973 ஆம் ஆண்டு பிஸ்க் பல்கலைக்கழகத்தில் ஆர்வமுடைய இயற்பியலாளர்கள் குழு கூடி, சிறப்பு மிக்க மூன்று ஆப்பிரிக்க–அமெரிக்க இயற்பியலாளர்களுக்குச் சிறப்பு செய்தனர்.]].[2] இவ்வமைப்பு 1977 இல் மார்கன் மாநிலப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு வால்டர் ஈ. மசே, ஜேம்ஸ் தவேன்போர்ட் ஆகியோரால் மேலாளப்பட்டது.[1][3]
செயல்பாடுகள்
[தொகு]ஒவ்வொரு ஆண்டும் இவ்வமைப்பு பிப்ரவரி மாதத்தில் கருத்தரங்கம் நடத்துகிறது. அறிவியல் நிகழ்ச்சிகள், மாணவர்களின் தொழில்திறன் மேம்பாடு, புத்தாக்க அறிவியல் கண்காட்சி வேலைவாய்ப்பு கண்காட்சி போன்றவை நடைபெறுகின்றன.
உலகளவில் இயற்பியல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதே இதன் முதன்மை நோக்கம். நோபல் பரிசாளர் அப்துஸ் சலாம் இவ்வமைப்பின் தலைவராக இருந்தார். சார்லஸ் பிரௌன் இவ்வமைப்பில் உறுப்பினராக இருந்தனர். இவர்கள் இணைத்து EBSI எனும் அமைப்பை ஏற்படுத்தினர். இவ்வமைப்பு அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கூட்டமைப்பை ஆப்பிரிக்க, அமெரிக்க நாட்டு இயற்பியல் அறிஞர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து மனித ஆற்றலை மேம்படுத்துவதே ஆகும்.[1]
குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்
[தொகு]நீல் திகிராசே தய்சன்[4] உரொனால்டு எல். மாலெட்[5] ஆகியோர் இக்கழகத்தில் இணைந்திருந்தனர். சர்லே ஆன் ஜாக்சன் இதன் தலைவராக இருந்தார்.[6] 2022 ஆண்டில் கக்கீர் ஒலியூசே தலைவராக இருந்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 African Americans in Science. ABC-CLIO. pp. 524–526. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85109-998-6.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ National Society of Physicists. "NSBP History". nsbp.org. பார்க்கப்பட்ட நாள் 7 July 2022.
- ↑ Davenport, James (1993). "The National Society of Black Physicists: Reflections on Its Beginning". In Mickens, Ronald (ed.). The African American Presence in Physics. Atlanta: Horton Lind Communication. pp. 6–12.
- ↑ "Neil deGrasse Tyson". American Museum of Natural History. Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2014-09-16.
- ↑ "Biography, Bibliography and Professional Summary of Ronald L. Mallett, Professor, Department of Physics" (PDF). Phys.uconn.edu. April 2003. பார்க்கப்பட்ட நாள் 10 July 2018.
- ↑ Clarence G. Williams (February 2003). Technology and the Dream: Reflections on the Black Experience at MIT, 1941-1999. MIT Press. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-73157-7.
- ↑ "Officers". National Society of Black Physicists. பார்க்கப்பட்ட நாள் 7 October 2022.